தாராபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் கயல்விழி நேரில் ஆய்வு!

வரும் 21ஆம் தேதி தாராபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளதையொட்டி, விழா ஏற்பாடுகள் குறித்து ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக கோவில் நிர்வாகத்துடன் போலீசார் ஆலோசனையில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: தாராபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்ச கயல்விழி செல்வராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பழைய காவல் நிலைய வீதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு தாராபுரம் சுற்று வட்டாரத்தில் உள்ள ஏராளமான கிராம மக்கள் வருகை தந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

இந்த நிலையில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனால் கோவிலில் பராமரிப்பு மற்றும் மராமத்து பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.



இதனை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த கும்பாபிஷேக விழாவிற்கு 10,000 மேற்பட்ட பொதுமக்கள் வருகை தருவதாக எதிர்பார்க்கப்படுகிறது.



இதனால் கும்பாபிஷேகம் நடைபெறும் வரும் 21-ஆம் தேதி எவ்வாறு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட வேண்டும் எவ்வாறு பொதுமக்களை கூட்ட நெரிசலில் இல்லாமல் தரிசனத்திற்கு அனுப்பி வைப்பது உள்ளிட்ட ஆய்வு மற்றும் ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்த ஆலோசனையில் தாராபுரம் டி.எஸ்.பி கலையரசன் ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நகர் மன்ற தலைவர் பாபு கண்ணன் திமுக நகர செயலாளர் முருகானந்தம் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.‌

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...