கார்கள் நின்றிருந்த இடத்தை விட்டு விட்டு தார் சாலை போட்டதால் அதிர்ச்சி - ஒப்பந்ததாரரின் அலட்சியத்திற்கு மக்கள் கண்டனம்

திருப்பூரில் கார்கள் நின்றிருந்ததை அப்புறப்படுத்தாமல் அதை ஒரு சாக்காக காரணம்காட்டி, அந்த இடத்தை விட்டுவிட்டு மற்ற இடங்களில் பெயரளவுக்கு மட்டும் ஒப்பந்ததாரர் சாலை போட்டுள்ளது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.



திருப்பூர்: சில ஆண்டுகளுக்கு ஒரு முறைமட்டுமே சாலை சீரமைக்கப்படுகிறது. அப்பையாவது ஒழுங்காக சாலை போடவேண்டாமா என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பழைய தார் சாலைகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பின்னி காம்பவுண்ட் வீதியில் தார் சாலைகள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

நேற்று இரவு தார் சாலை சீரமைப்பு பணி நடைபெற்ற நிலையில் இரு வேறு இடங்களில் கார்கள் நின்றிருந்த நிலையில் அதனை அப்புறப்படுத்தாமல் கார்கள் நின்று கொண்டிருந்த இடத்தை விட்டு விட்டு மற்ற இடங்களில் தார் சாலை போடப்பட்டு உள்ளது.



சில ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே சாலை சீரமைக்கப்படக்கூடிய நிலையில் இது போன்று கார்கள் நிற்பதை காரணம் காட்டி ஒப்பந்ததாரர் இடைவெளி விட்டு விட்டு தார் சாலை போட்டு சென்று இருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

Coimbatore Police Introduce Family Liaison Officers to Assist Crime Victims

Coimbatore City Police have introduced the Family Liaison Police Officer (FLPO) system to ensure continuous communicatio...

Dengue Cases Declining in Coimbatore, Prevention Measures Intensified: Minister Arunraj

Health Minister K.G. Arunraj said dengue cases in Coimbatore have declined compared to last year, with preventive measur...

முதல்வர் விஜய்யின் பேச்சை கண்டித்து கோவையில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

முதல்வர் விஜய்யின் சட்டப்பேரவை பேச்சைக் கண்டித்து, செப். 12-ம் தேதி ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் செஞ்சிலுவை ச...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 புதிய மாணவர்களுக்கான வரவேற்பு விழா

கோவை ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 27-வது Batch முதலாமாண்டு மாணவர்களுக்கான YUVA 2026 Freshmen...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளர் தினம் கொண்டாட்டம்

துடியலூர் அருகே வட்டமலை பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளர் தினம் சிறப்பாக கடைப்பிடிக்க...

கோவை நீதிமன்ற வளாகத்தில் கைகலப்பு; போலீசார் விசாரணை

கோவை நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வழக்கறிஞரின் காரின் நான்கு டயர்களிலும் காற்றை இறக்கியதாக கூறப்படும் விவகாரத...