உடை விஷயத்தில் எல்லையை மீறினால் நாம் மிருகமாகி விடுவோம் - தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு கருத்து!

ஆடை சுதந்திரம் என்பது இப்படித்தான் என்று எதுவும் இல்லை, நமக்கு எல்லை தெரியும். எல்லை மீறி சென்றால் மிருகங்களுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். இதுதான் எல்லை என்பதை தெரிந்து அப்படி ஆடை அணிய வேண்டும் என தெரிவித்துள்ளார்.



கோவை: உடை விஷயத்தில் எல்லையை மீறினால் நாம் மிருகமாகி விடுவோம் என தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார்.



கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில், மக்கள் சேவை மையம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவியருக்கான கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் மக்கள் சேவை மையத்தின் நிறுவனரும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு ஆகியோர் பங்கேற்றனர்.



இந்த நிகழ்வில் ஆடை அலங்கார அணிவகுப்பில் வானதி சீனிவாசன் மற்றும் குஷ்பு ஆகியோரும் கேட்வாக் நடந்து மாணவ, மாணவியரை உற்சாகப்படுத்தினர்.



பின்னர் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு,



கைத்தறி ஆடைகளை எல்லா இடங்களிலும் முன்னிறுத்த வேண்டும். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

மணிப்பூர் குறித்த கேள்விகளுக்கு, அரசியல் குறித்த கேள்விகள் வேண்டாம் என்று தெரிவித்தார். மேலும் குஜராத் முதல்வராக இருந்த பொழுது மோடிக்கு விசா மறுக்கப்பட்டது. இப்பொழுது அவரை அமெரிக்கா கூப்பிட்டு கௌரவிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. பைடனே தேடி வந்து வணக்கம் சொல்லும் நிலை இருக்கிறது.

பிரதமர் மோடி உலகத்திலயே மிகப்பெரிய தலைவராக இருக்கிறார். அவரது ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். திரைத்துறையில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற கேள்விக்கு, சூப்பர் ஸ்டார் யார் என்பது இப்பொழுது முக்கியமான விசயமா? எல்லாவற்றிக்கும் பதில் சொல்ல முடியாது என பதிலளித்தார்.

கலைஞர் என்னுடைய ஆசான் என்பதில் பெருமைப்படுகிறேன். ஆகஸ்ட் 7 ம் தேதி தேதி அவருடைய நினைவு நாள், காலையிலேயே அவருக்கு வணக்கம் சொல்லி என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி பதிவு செய்து இருக்கின்றேன்.

கலைஞர் குறித்து பேசுவது என்றால் நாள் முழுக்க பேசலாம், நான் அங்கிருந்து வந்தவள், அவரைப் பற்றி நன்றாக தெரியும், வேறு ஒரு தளத்தில் கலைஞர் குறித்து பேசலாம்.

பேசன் ஷோக்களில் வருபவர்கள் யாருமே சிரிக்க மாட்டேன் என்கிறார்கள், இது எனக்கு சந்தேகமாக இருக்கிறது. இப்படி ஒரு சட்ட விதி இருக்கிறதா? சின்ன சிரிப்பே இல்லாமல் பொதுவாக எல்லா பேசன் ஷோக்களிலும் பார்க்க முடிகின்றது.

கைத்தறியில் செய்யப்பட்ட ஆடைகள் எனக்கு பிடிக்கும். இந்த ஆட்சியில் கைத்தறி வளர்ச்சி அமைந்திருக்கிறது. பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டு இருப்பதால் வீட்டில் கைத்தறி பொருட்கள் பயன்படுத்துகின்றோம். கல்லூரி மாணவர்களுக்கு வெஸ்டர்ன் உடைகள் வேண்டாம் என்று சொல்லவில்லை, அதே வேளையில் நமது கலாச்சாரங்களை மறந்துவிட வேண்டாம் என சொல்கின்றேன்.

பிரதமர் ஒவ்வொரு இடத்திலும் விவசாயிகள், நெசவாளர்கள் வாழ்க்கை மேம்பாட்டுக்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். கைத்தறி நெசவாளர்களுக்கான நல வாரியம் உருவாக வானதி இருக்கிறார், நான் இருக்கிறேன் எல்லாருமே சேர்ந்து தான் செய்ய முடியும் கண்டிப்பாக செய்வோம்.

ஆடை சுதந்திரம் என்பது இப்படித்தான் என்று எதுவும் இல்லை, ஆனால் மனிதர்களுக்கு ஆறு அறிவு இருக்கிறது, நமக்கு எல்லை தெரியும். எல்லை மீறி சென்றால் மிருகங்களுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.

இதுதான் எல்லை என்பதை தெரிந்து அப்படி ஆடை அணிய வேண்டும். எனக்கு புடவை தான் எல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...