முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளையொட்டி உடுமலையில் திமுக சார்பில் அமைதி ஊர்வலம்!

திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் உடுமலையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 5ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அமைதி ஊர்வலத்தில் ஈடுபட்டு, மத்திய பேருந்து நிலையம் பகுதியில் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.



திருப்பூர்: உடுமலையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் 2000க்கும் மேற்பட்டோர் அமைதி ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு உடுமலை மாரியம்மன் கோவில் அருகில் இருந்து துவங்கி மத்திய பேருந்து நிலையம் வரை அமைதி ஊர்வலம் நடைபெற்றது.



திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இலா.பத்மநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலமானது, பழைய பஸ் நிலையம் பைபாஸ் ரோடு வழியாக வந்து மத்திய பேருந்து நிலையம் பகுதியில் அலங்கரிக்கப்பட்ட கலைஞரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தபட்டது.



இந்த அமைதி பேரணியில் உடுமலை நகராட்சி முன்னாள் தலைவரும், நகர செயலாளருமான வேலுச்சாமி, நகராட்சி தலைவர் மத்தீன், குடிமங்கலம் வடக்கு ஓன்றிய செயலாளர் அணிக்கடவு கிரி, வழக்கறிஞர் செந்தில்குமார், யூ.என்.பி.குமார், திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமார், திருப்பூர் தெற்கு மாவட்ட பொருளாளர் முபாரக் அலி உட்பட 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...