கோவையில் பெண்ணை கொலை செய்து விட்டு 5.5 சவரன் நகைகளை கொள்ளையடித்த நபர் கைது!

கோவையில் பெண்ணை கொலை செய்து விட்டு நகையை கொள்ளையடித்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த மோகன்ராஜ் (33) என்ற நபரை போலீசார் கைது செய்தனர். பிடிபட்ட மோகன்ராஜ் கோவை ராமநாதபுரத்தில் தங்கி, ரேஸ்கோர்ஸ் பகுதியில் சூப் கடை நடத்தி வந்துள்ளார் விசாரணையில் தகவல்.



கோவை: கோவை அடுத்த சேரன்மாநகர் பகுதியில் பெண்ணை கொலை செய்துவிட்டு, 5.5 பவுன் நகையை திருடிச் சென்ற நபரை பீளமேடு தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கோவை சேரன்மாநகர் பாலாஜிநகர் பகுதியை சேர்ந்த சர்க்கரவர்த்தி என்பவரது மனைவி ஜெகதீஸ்வரியை (38)கடந்த 28 ஆம் தேதி மர்ம நபர்கள் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த சுமார் 5.5 பவுன் நகைகளை மர்ம நபர் திருடிச் சென்றார்.

இது குறித்து பீளமேடு போலீஸார் வழக்கு பதிவு செய்து, சிங்காநல்லூர் சரக உதவி ஆணையர் பார்த்திபன் தலைமையில் தனிப்படை அமைத்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதற்காக பீளமேடு பகுதியில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவிற்கு உள்ள அனைத்து சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார், சந்தேகத்திற்குரிய நபர் ஒருவரை கண்டறிந்தனர்.

அதன் அடிப்படையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மோகன்ராஜ் (33) என்ற நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பிடிபட்ட மோகன்ராஜ் கோவை ராமநாதபுரத்தில் தங்கி, ரேஸ்கோர்ஸ் பகுதியில் சூப் கடை நடத்தி வந்தது தெரியவந்தது.

இவர் பாலாஜி நகர் பகுதியில் குடியிருந்த போது ஜெகதீஸ்வரியுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் பழகி வந்ததுள்ளனர். இந்நிலையில் ஜெகதீஸ்வரி சில நாட்களாக வேறு சிலருடன் பேசி பழகுவது குறித்து மோகன்ராஜ் கேட்டு தகராறு செய்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் நம்பர் பிளேட்டை மாற்றிக் கொண்டு, மெடிக்கல் கடையில் கையுறையை வாங்கிக் கொண்டு ஜெகதீஸ்வரியின் வீட்டிற்கு சென்று அவரை கொலை செய்து விட்டு, அவர் அணிந்திருந்த 5.5 பவுன் நகைகளை திருடிச் சென்றுள்ளார்.

மேலும் அந்த நகைகளை, டவுன்ஹால் பகுதியில் உள்ள கடையில் விற்பனை செய்துவிட்டு, யாரிடமும் சிக்க மாட்டோம் என எண்ணி இருந்துள்ளார். இந்நிலையில் சிசிடிவி காட்சிகளை வைத்து தனிப்படை போலீஸார் அவரை மடக்கி பிடித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மோகன்ராஜுக்கு திருமணம் ஆகி பெண் குழந்தை உள்ளது. மேலும் அவர் மீது ஏற்கனவே சேலம் மாவட்டத்தில் கொலை வழக்கும் நிலுவையில் உள்ளது. கைது செய்யப்பட்ட மோகன்ராஜ் மறைத்து வைத்திருந்த இரு சக்கர வாகனம் மற்றும் கையுறை, விற்பனை செய்த நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கோவை மாநகர உதவி ஆணையர் பார்த்திபன்,



இந்த கொலை வழக்கு தொடர்பாக மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் நான்கு குழு அமைத்து குற்றவாளியை தேடி வந்தோம்.

இந்நிலையில் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த சூப் வியாபாரி மோகன்ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்இதுகுறித்து சேரன்மாநகர் பகுதியிலிருந்து ரேஸ்கோர்ஸ் வரையிலான சுமார் 250 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தோம்.

அதில் பக்கத்து வீட்டிலிருந்த கேமரா பதிவில் சந்தேகத்திற்குரிய வாகனம் ஒன்று காலை 10.55 மணி முதல் மதியம் 12.55 மணி வரை ஜெகதீஸ்வரியின் வீடு அருகே இருந்தது.

குறிப்பிட்ட அந்த வாகனம் கோவை பந்தையசாலை பகுதியிலுள்ள வேலன் காப்பி கடை பகுதியிலிருந்து புறப்பட்டு பீளமேடு வழியாக பாலாஜி நகர் சென்று அங்கிருந்து சரவனம்பட்டி,கணபதி வழியாக மீண்டும் பந்தயசாலை வேலன் காப்பி கடையை அடைந்ததும் உறுதி செய்யப்பட்டது.

மேலும் தனது ஜாவா இருசக்கர வாகனத்தை தனது கடையில் நிறுத்தி வைத்து விட்டு வேறு ஒரு ஸ்கூட்டி வாகனத்தை எடுத்து கொண்டு அவினாசி சாலை வரை சென்ற அவர், அங்கு ஒரு ஸ்டிக்கர் கடையில் போலி வாகன பதிவெண்ணை வாங்கி ஸ்கூட்டியில் ஒட்டி ஜெகதீஸ்வரியின் வீட்டிற்கு சென்று கொலை சம்பவத்தை அரங்கேற்றி விட்டு மீண்டும் கடைக்கு வரும் வழியில் போலி ஸ்டிக்கரை மாற்றியுள்ளார்.

கடந்த 2016 ம் ஆண்டு முதல் 21 ம் ஆண்டு வரை மோகன்ராஜ்பாலாஜி நகர் பகுதியில் வசித்த போது இருவருக்கும் இடையே இருந்த நெருக்கம் அண்மை காலமாக குறைந்ததால் ஜெகதீஸ்வரி மீது சந்தேகம் எழுந்ததாகவும் எப்போதும் யாருக்கும் சந்தேகம் வராத வகையில் வேறு எண்ணிலிருந்து மட்டுமே ஜெகதீஸ்வரியை தொடர்பு கொண்டு வந்துள்ளார்.

தற்போதும் காவல்துறையை திசை திருப்பவே நம்பர் பிளேட்டை மாற்றியும் சாதாரணமாக தனது பணியை மேற்கொண்டும் வந்துள்ளார் மோகன்ராஜ். ஆதாயத்திற்காக கொலை செய்யப்பட்டதாக திசைதிருப்பும் வகையில் ஜெகதீஸ்வரியின் நான்கரை சவரன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளார்.

மேலும் தற்போது அவரிடமிருந்து ஒரு ஜாவா இருசக்கர வாகனம் மற்றும் ஒரு ஸ்கூட்டி வாகனம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...

Truck Carrying Illegal Gravel Seized on L&T Bypass in Coimbatore

Officials from the Department of Geology and Mining in Coimbatore seized a tipper lorry carrying around three units of g...