முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா - சப்பாத்தியில் கருணாநிதியின் உருவத்தை வரைந்த ஓவிய கலைஞர்!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இதனையொட்டி கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த UMT ராஜா என்ற ஓவிய கலைஞர், சப்பாத்தியில் கருணாநிதியின் உருவத்தை வரைந்து அசத்தியுள்ளார்.


கோவை: கோவை குனியமுத்தூர் அருகே சப்பாத்தியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவத்தை வரைந்து ஓவிய கலைஞர் ஒருவர் அசத்தியுள்ளார்.

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும், திமுகவின் முன்னாள் தலைவருமான மு.கருணாநிதியின் 100வது பிறந்த நாளை ஒட்டி கலைஞர் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு இடங்களில் அரசு சார்பிலும் திமுக கட்சியின் சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த UMT ராஜா என்ற ஓவிய கலைஞர், சப்பாத்தியில் கருணாநிதியின் உருவத்தை வரைந்து அசத்தியுள்ளார். ஒரு சிறிய அளவிலான இரும்பு கம்பியை நெருப்பில் காய்ச்சி அதன் மூலம் சப்பாத்தியில் கலைஞரின் ஓவியத்தை வரைந்துள்ளார்.

இதனை செய்வதற்கு சுமார் 3 மணி நேரம் எடுத்துக் கொண்டதாக கூறியுள்ள அவர், வரைந்த ஓவியத்தில் கலைஞர் மு.கருணாநிதியின் முகமும், அதன் கீழ் "கலைஞர் 100" என்ற வார்த்தையும் இடம்பெற்றுள்ளது.

இவர் இதற்கு முன்னதாகவே பல்வேறு மைக்ரோ ஆர்ட்டுகளை (Micro Art) தங்கத்தில் செய்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...