வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - மேயர் தினேஷ்குமார் எச்சரிக்கை!

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாமன்ற கூட்டத்தில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் எச்சரிக்கை விடுத்தார். இன்றைய மாமன்ற கூட்டத்தின் போது, தூய்மை பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர்: திருப்பூரில் வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாமன்ற கூட்டத்தில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



திருப்பூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமையில் இன்று நடைபெற்றது.



கூட்டத்தின் துவக்கத்தில் உரையாற்றிய மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் பேசியதாவது,



திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பயண்பாட்டில் இருந்தும் வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து இரண்டு வார்டுகளில் கள ஆய்வு மேற்கொண்டிருந்த போது வரி ஏய்ப்பு செய்வது உறுதி செய்யப்பட்டு இருந்தது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

ஆகஸ்ட் மாதம் முடிவதற்குள் வரிவிதிப்பு இல்லாமல் வரி ஏய்ப்பு செய்பவர்கள் தாங்களாகவே முன்வந்து புதிய வரியை போட்டு வரியை செலுத்த வேண்டும். இது குறித்து மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி மண்டல அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

ஆகஸ்ட் மாதத்திற்குள் வரி ஏய்ப்பு செய்பவர்கள் புதிய வரியை போட்டு வரி செலுத்தவில்லை என்றால் செப்டம்பர் மாதம் உள்ளாட்சி விதிகளின்படி கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதனை தொடர்ந்து மாமன்ற கூட்டம் நடைபெற்றது.

இதில் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்து தினந்தோறும் போராட்டத்தில் ஈடுபட்டு வரக்கூடிய நிலையில், அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரைத்த குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டும் ஒப்பந்த பணியாளர்களை வேறு பணியிடங்களுக்கு மாற்ற கூடாது.

இவ்வாறான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வெளிநடப்பு செய்வதாக அறிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதேபோல் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பழைய மார்க்கெட் வீதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பூ மார்க்கெட் கட்டப்பட்டிருந்த நிலையில் பூ வியாபாரிகள் மாநகராட்சி நிர்வாகத்தில் ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட காட்டன் மார்க்கெட் வளாகத்தை விட்டு புதிய பூ மார்க்கெட்டுக்கு வராததால் மாநகராட்சிக்கு வருவாய் பாதிக்கப்படுகிறது.

இதில் யார் தலையீடு உள்ளது என்பதை மாநகராட்சி மேயர் வெளிப்படை தன்மையோடு அறிவிக்க வேண்டும் என அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சிக்கு உட்பட்ட குடிநீர் வாரிய ஆய்வாளர்கள் மற்றும் குடிநீர் திறப்பாளர்கள் குடிநீர் விநியோகிக்கும் நேரத்தை மாமன்ற உறுப்பினர்களுக்கு முறையாக தெரிவிப்பதில்லை.

குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் பணிகளை முறையாக செய்வதில்லை என குற்றம் சாட்டினார் இது தொடர்பாக மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்ததோடு அதிகாரிகள் அலட்சியப் போக்கோடு செயல்படுவதாகவும் மாநகராட்சி கூட்டத்தில் குற்றம்சாட்டினார்.

இதனை அடுத்த கூட்டத்திற்குள் திருத்திக் கொள்ள வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து மாமன்ற கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Newsletter

பர்மிட் தாமதம், கட்டண குழப்பம்: அமைச்சர் மீது ஆம்னி உரிமையாளர்கள் சாடல்

ஆம்னி பேருந்து அதிக கட்டண வசூல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் இன்றுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என உரிமையாளர் சங்கம்...

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...