கோவையில் குப்பை அள்ளும் டெண்டர் வழங்கியதில் முறைகேடு - அதிமுக கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்!

கோவை மாநகராட்சியில் குப்பை அள்ளுவது குறித்த ரூ.170 கோடி மதிப்பிலான டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி அதிமுக கவுன்சிலர்கள் கையில் பேனருடன் மாமன்ற அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.



கோவை: குப்பை அள்ளுவது குறித்த ரூ.170 கோடி மதிப்பிலான டெண்டர் வழங்கியதில் முறைகேடு கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு அதிமுக கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாநகராட்சி சாதாரண கூட்டம் விக்டோரியா அரங்கில் மேயர் கல்பனா தலைமையில் துவங்கி நடைபெற்றது. முன்னதாக இந்த கூட்டத்திற்கு வந்த அதிமுக உறுப்பினர்கள் பிரபாகரன், சர்மிளா சந்திரசேகர், ரமேஷ் ஆகியோர் மாநகராட்சி கவுன்சிலர்களின் அனுமதி பெறாமல் 170 கோடி ரூபாய் பணத்தை கையாள்வதற்கான அனுமதியை தனியாருக்கு மேயர் கல்பனா அளித்து இருப்பதாக குற்றம்சாட்டினர்.



மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கையில் பதாகையுடன் மன்ற அரங்கு முன்பாக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

அப்போது கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் கோவை மாநகராட்சியில் குப்பை எடுப்பதற்கு தனியாருக்கு டெண்டர் விடுவது தொடர்பாக அனுமதி கோரப்பட்ட போது, இதை ஏற்றுக்கொள்ளக்கூடாது என தி.மு.க, அ.தி.மு.க என கவுன்சிலர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தீர்மானம் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த மாதம் மீண்டும் இந்த பொருள் சபைக்கு வருகிறது. இந்த டெண்டர், கூட்டத்தின் அனுமதி பெறாமல் 170 கோடி பணம் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு உள்ளது. மேயர் தனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்றே தெரியாமல் இருக்கிறார். அவசர கோலத்தில் டெண்டர் வழங்கப்பட்டுள்ளது எனவும் குற்றம்சாட்டினர்.

அரசியலுக்காக நாங்கள் இதனை பேசவில்லை, இந்த விவகாரத்தில் எத்தனை கோடி கைமாறியது என தெரியவில்லை. இது தொடர்பாக கண்டிப்பாக விசாரணை தேவை. கோவை மாநகராட்சியின் மேயர் வீட்டிற்கு லஞ்ச ஒழிப்புத் துறையும் அமலாக்கத்துறையும் விரைவில் சோதனைக்கு போகும் எனவும் தெரிவித்தனர்.



கூட்டம் துவங்கும் முன்பாகவே அதிமுக கவுன்சிலர்களின் போராட்டம் காரணமாக மாமன்ற வளாகத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...