தையல் தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம்!

ஓய்வூதியத்தை ரூ.3,000ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தையல் தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக கோவை பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு சிஐடியு சார்பில் 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்குவது உள்ளிட்ட தையல் தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தையல் தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 12 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருக்கும் ஓய்வூதியத்தை 3000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும், 200 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

அனைத்து விதமான பண பயன்களையும் உயர்த்தி வழங்க வேண்டும், ஆன்லைன் சர்வர்களில் அடிக்கடி ஏற்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்திட வேண்டும். அனைத்து பண பயன்களும் விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தையல் கூட்டுறவு சங்கத்தில் தமிழக அரசின் இலவச சீருடை தைக்கும் தையல் தொழிலாளர்களுக்கு எட்டு ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருக்கும் கூலியை உயர்த்தி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்படுகிறது.

மாநிலம் முழுவதும் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக கோவை மாவட்ட அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



சிஐடியு கோவை மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கோவை மாவட்ட தையல் கலைஞர்கள் சங்கம், இந்திய தொழிற்சங்க மையம், அமைப்பு சாரா சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...