கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் ‘விபத்திலிருந்து பாதுகாக்கும்’ மாதிரி பயிற்சி!

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் விபத்திலிருந்து பாதுகாக்கும் மாதிரி பயிற்சி இன்று RTO அலுவலக பிரதான சாலை அருகே நடத்தப்பட்டது. இதில் விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மீட்பது மற்றும் உரிய சிகிச்சை அளித்து கண்காணிப்பது குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.



கோவை: ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் சமூக விழிப்புணர்வுக்காக "விபத்திலிருந்து பாதுகாக்கும்" மாதிரி பயிற்சி நடத்தப்பட்டது.

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் கோவை RTO அலுவலக பிரதான சாலை அருகே விபத்திலிருந்து பாதுகாக்கும் மாதிரி பயிற்சி நடத்தப்பட்டது. ஊழியர்களும், பொதுமக்களும் எதிர்பாராத சில விபத்துகளை சமாளிக்க இந்த மாதிரி பயிற்சி உதவும் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை இந்த பயிற்சியை நடத்துகிறது.

RTO அலுவலக பிரதான சாலைக்கு அருகில் வெளிப்புற விபத்து மாதிரி பயிற்சியை நடத்தியது. இந்த பயிற்சியில் 21 பயணிகளும், 1 ஓட்டுநரும் கலந்து கொண்டனர்.



இதில் பேருந்து இரு சக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க மின் கம்பத்தில் மோதியது. மருத்துவக் குழு மற்றும் சேவை பணியாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மருத்துவ அவசரகால உதவியாளர்களும் தயாராக இருந்தனர்.



அவசரநிலை ஏற்பட்டவுடன், வெளிப்புற அவசர நிலையை குறிக்க மருத்துவமனையில் "கோட் மஞ்சள்" (Code Yellow) அறிவிக்கப்பட்டது. அவசரகால குறியீடு மஞ்சளில் உள்ள ஐந்து குழுக்கள் விரைந்தன. 1. தள மீட்புக் குழு, 2.உள் சோதனைக் குழு, 3.கார்டன் குழு, 4.காப்புக் குழு மற்றும் 5.நோயாளி தகவல் மேலாண்மைக் குழு.



அவசரநிலை ஏற்பட்ட உடனே, தள மீட்புக் குழு விரைந்து நோயாளிகளுக்கு முதலுதவி செய்தது, மேலும், உயர் சிகிச்சை தேவைபடுவோருக்கு உயர் பாதுகாப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்பு பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டனர். நோயாளிகளை மீண்டும் பரிசோதித்து அவர்களை இடம் மாற்றியது.



மொத்தத்தில். 5 நோயாளிகள் சிவப்பு சிகிச்சை உயர் முன்னுரிமை பிரிவில் இருந்தனர். அவர்களில் இருந்து நான்கு பேர் ICU க்கு மாற்றப்பட்டனர், ஒருவர் US ஸ்கேன் முடித்த பின்பு அறுவை சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.



பாதிக்கப்பட்ட 8 பேர் மஞ்சள் சிகிச்சை கீழ் பிரிவில் பிரிக்கப்பட்டு பாதுகாப்பில் வைக்கப்பட்டனர். பின் கண்காணிப்பிற்காக அறுவை சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டனர். பாதிக்கப்பட்ட 2 பேர் பச்சை பிரிவு பாதுகாப்பு சோதனையில் வைக்கப்பட்டார்கள் பின் உள்நோயாளிகளின் பிரிவுக்கு மாற்றப்பட்டனர்.

மேலும் பாதிக்கப்பட்ட 4 பேரும் வழக்கமான சோதனைக்கு பிறகு அவசர நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். 2 நோயாளிகள் கருப்பு சோதனை பிரிவில் பாதுகாப்பாக வைக்கப்பட்டனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களை நம் கார்டன் குழுவின் உதவியுடன் மாற்றப்பட்டனர்.

மீட்பு குழு உறுப்பினர்கள் அந்தந்த வார்டுகளில் உள்ள நோயாளிகளை கவனித்து கொண்டனர். இந்த முழு மாதிரி பயிற்சியும் பதிவு செய்யப்பட்டது. ஊடகங்கள் இருந்தன.

இந்நிகழ்வில் போக்குவரத்துக்கு காவல்துறை துணை ஆணையர் கலந்து கொண்டார். பொதுமக்களிடையே பீதியோ, குழப்பமோ ஏற்படாத வகையில் இது ஒரு விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சி என்று சுவரொட்டிகள் வெளியிடப்பட்டன. இந்த மாதிரி பயிற்சி வெற்றிகரமாக நடந்தது.

இந்த விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சியின் நோக்கம், நடைமுறைகளின் செயல்களையும் மற்றும் உண்மையான அவசர நிலையின் போது ஏற்படும் பதட்டத்தை குறைக்க உதவும். இடையூறு ஏற்படாமல் உயிர்களையும் சுற்றுச்சூழலையும். பாதுகாப்பதே முதன்மையான எங்கள் மருத்துவமனையின் குறிக்கோள்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் எமர்ஜென்சி வார்டு எந்த அவசர நெருக்கடியையும் சமாளிக்கும் வகையில் அதிநவீன வசதிகளுடன் நன்கு பொருத்தப்பட்டுள்ளது. அவசர சிகிச்சைப் பிரிவில் சிறு காயங்கள் முதல் கடுமையான நோய்கள் வரை, ஒவ்வொரு நோயாளிக்கும் மிக உயர்ந்த கவனிப்பு கிடைப்பதை உறுதி செய்கிறது என தெரிவிக்கப்பட்டது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...