கோவை வடக்கு தொகுதியில் அடிப்படை வசதிகள் கோரி எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் மனு!

கோவை வடகிழக்கு தொகுதிக்கு உட்பட்ட 18, 31, 32, 40, 42, 43, 44, 46ஆம் வார்டுகளில் அடிப்படை வசதிகள் உள்பட பல்வேறு வசதிகளை செய்து தரவேண்டும் என வலியுறுத்தி கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப்பிடம் சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் மனு அளித்துள்ளார்.


கோவை: கோவை வடக்கு தொகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி மாநகராட்சி ஆணையரிடம் சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூனன் மனு அளித்துள்ளார்.

கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுனன் கட்சி நிர்வாகிகளுடன் மாநகராட்சி அலுவலகத்துக்கு வருகை தந்தார். அங்கு மாநகராட்சி ஆணையர் பிரதாப்பிடம் கோரிக்கை மனுவை வழங்கினார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கோவை மாநகராட்சி 29வது வார்டு மோர் மார்க்கெட் பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. 30ம் வார்டு மணியக்காரம்பாளையம் செல்லும் பாதையில் உள்ள பாரதியார் ரோடு, அண்ணாநகர், ஸ்ரீதேவி நகர், மூகாம்பிகை நகர் மற்றும் பெரியார் நகரச்சாலைகளில் வேகத்தடை அமைக்க வேண்டும்.

கணபதி கஸ்தூரிபாய் வீதியில் உள்ள பழுதான சாலைகளை சீரமைத்து தர வேண்டும். மாமரத்தோட்டம், மணல் தோட்டம் பகுதிகளில் உள்ள பூங்காவுக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். சங்கனூர் பாலத்தின் அடியில் உள்ள ஓடையை தூர்வார வேண்டும்.

20வது வார்டில் பாரதி நகர் முதல் வ.உ.சி நகர் வரை குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். இதுதவிர 18, 31, 32, 40, 42, 43, 44, 46ஆம் வார்டுகளில் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

Newsletter

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்...

புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனத்தில் விநாயகருக்கு ராஜ அலங்காரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனம் மற்றும் இரண்டு டன் மலர்களால் ரா...

வரசித்தி விநாயகருக்கு வெள்ளி கவசம் - ரூ.10 லட்சம் நோட்டுகளால் அலங்காரம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெ...