மசினகுடியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சிறுத்தை - பரபரப்பு!

மசினகுடி - ஊட்டி சாலையில் உள்ள வாழைத்தோட்டம் பிரிவில் 6 வயதுடைய சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த நிலையில், வனத்துறையினர் கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் உடற்கூராய்வு செய்து இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


நீலகிரி: மசினகுடி அருகே 6 வயது மதிக்கத்தக்க சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்கு உள்ள மசினகுடி கோட்டத்தில் வனத்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிங்காரா வனச்சரகத்திற்குட்பட்ட மசினகுடி - ஊட்டி சாலை ரோட்டில் துர்நாற்றம் வீசியுள்ளது.

இதனையடுத்து வனத்துறையினர் வாழைத்தோட்டம் பிரிவில் சென்று பார்த்தனர். அப்போது அங்கு உள்ள ஒரு பகுதியில் 6 வயதுடைய பெண் சிறுத்தை ஒன்று உயிரிழந்து கிடந்தது. இதுதொடர்பாக முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின்பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து கால்நடை மருத்துவர்கள் மூலம் சிறுத்தையை பிரேத பரிசோதனை செய்யும் பணிகள் நடைபெற்றது.

பிரேத பரிசோதனையின் முடிவில் தான் அந்த சிறுத்தை எப்படி இறந்தது என்பது பற்றிய விவரங்கள் தெரியவரும். இருந்தபோதிலும் அது சக விலங்கு தாக்கியதால் படு காயம் அடைந்து இறந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்...

புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனத்தில் விநாயகருக்கு ராஜ அலங்காரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனம் மற்றும் இரண்டு டன் மலர்களால் ரா...

வரசித்தி விநாயகருக்கு வெள்ளி கவசம் - ரூ.10 லட்சம் நோட்டுகளால் அலங்காரம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெ...

பர்மிட் தாமதம், கட்டண குழப்பம்: அமைச்சர் மீது ஆம்னி உரிமையாளர்கள் சாடல்

ஆம்னி பேருந்து அதிக கட்டண வசூல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் இன்றுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என உரிமையாளர் சங்கம்...