மணிப்பூர் கலவரத்தை கண்டித்து தாராபுரத்தில் தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

மணிப்பூரில் நடைபெற்று வரும் கலவரம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கட்டுப்படுத்த தவறிய, பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசை கண்டித்து, தாராபுரத்தில் தமிழ் புலிகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



திருப்பூர்: மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய பாஜக அரசை கண்டித்து தாராபுரத்தில் தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மணிப்பூரில் நடந்து வரும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கட்டுப்படுத்த தவறிய மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசை, கண்டித்து தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு தமிழ் புலிகள் கட்சி சார்பில், மாவட்ட செயலாளர் காளிமுத்து தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து மண்டல துணை அமைப்பாளர் ஒண்டிவீரன் கூறியதாவது, பிரதமராக இருக்க மோடிக்கு தகுதி இல்லை. லட்ச கணக்கில் மக்கள் தொகை கொண்ட மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை கட்டுப்படுத்த முடிய வில்லை. பத்திரிக்கையாளர்களை சந்திக்க மறுக்கிறார்.

மணிப்பூரில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை பற்றி மவுனம் காப்பது ஏன். மணிப்பூர் பெண்களுக்கு நடந்த வன்கொடுமைக்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களை பாதுகாக்க தவறிய மணிப்பூர் மாநில அரசு உடனடியாக பதவி விலக வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.



இந்நிகழ்ச்சியில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசை கண்டித்தும், ஒரு மாநிலத்தில் நடக்கும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கட்டுப்படுத்த முடியாத மோடி உடனடியாக பதவி விலக வேண்டும். என கண்டன கோஷங்களை எழுப்பினர்.



இந்நிகழ்சியில், மாவட்ட செயலாளர் காளிமுத்து, தாராபுரம் நகர செயலாளர் தண்டபாணி, மண்டல துணை அமைப்பாளர் ஒண்டி வீரன், மண்டல மாணவர் அணி செயலாளர் விடியல் தில்லை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட தலைவர் ரவி உள்ளிட்ட தமிழ் புலிகள் கட்சி நிர்வாகிகள், தோழமை கட்சி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...