அடுத்த அமைச்சரவை கூட்டம் திகார் சிறையில் நடக்க வாய்ப்புள்ளது - முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் விமர்சனம்!

செந்தில் பாலாஜி கைது நடவடிக்கை, பொன்முடி மீதான விசாரணை, இதன் தொடர்ச்சியாக உதயநிதி ஸ்டாலின் அடுத்து விசாரணைக்கு உள்ளாக்கப்படலாம். திமுகவின் அடுத்த அமைச்சரவை கூட்டம் மத்திய அரசின் திகார் ஜெயிலில் கூட நடக்க வாய்ப்பிருக்கிறது என பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்.



திருப்பூர்: திமுகவின் அடுத்த அமைச்சரவை கூட்டம் மத்திய அரசின் திகார் ஜெயிலில் கூட நடக்க வாய்ப்பிருக்கிறது என முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்.



விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டிக்கும் வகையில் திருப்பூர் குமரன் நினைவகம் அருகே ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் காய்கறி விலை உயர்வை சுட்டிக்காட்டும் வகையில் காய்கறி மாலை அணிந்தபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும், திமுகவிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது, கடந்த திமுக ஆட்சி கரண்ட் கட் பிரச்சினையால் கவிழ்ந்தது. இப்போதைய திமுக ஆட்சி கரண்ட் பில் விவகாரத்தில் கவிழும்.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கை, அமைச்சர் பொன்முடி மீதான விசாரணை , இதன் தொடர்ச்சியாக உதயநிதி ஸ்டாலின் அடுத்து விசாரணைக்கு உள்ளாக்கப்படலாம். திமுகவின் அடுத்த அமைச்சரவை கூட்டம் மத்திய அரசின் திகார் ஜெயிலில் கூட நடக்க வாய்ப்பிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் எம் எஸ் எம் ஆனந்தன், உடுமலை ராதாகிருஷ்ணன், விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...