கவனக்குறைவாக சிகிச்சையளித்தால் ஒருவர் பலி - பல்லடம் அருகே செயல்பட்டு வரும் அக்குபஞ்சர் சென்டர் முற்றுகை!

பல்லடம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் ரிஷி அக்குபஞ்சர் சென்டரில் இருதய சிகிச்சைக்காக வந்த சம்பத் என்பவருக்கு கவனக்குறைவாக சிகிச்சை அளித்ததால் உயிரிழந்ததாக கூறி, அவர்களது உறவினர்கள் அக்குபஞ்சர் சென்டரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: பல்லடம் அருகேயுள்ள ரிஷி அக்குபஞ்சர் சென்டரில் கவனக்குறைவாக சிகிச்சை அளிக்கப்பட்டதால் ஒருவர் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ரிஷி அக்குபஞ்சர் சென்டர் என்ற மினி கிளினிக் ஒன்று கடந்த ஒராண்டிற்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் இந்த அக்குபஞ்சர் சென்டரில் பல்வேறு உடல் உபாதைகளுக்கான சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு பட்டேல் சாலை பகுதியை சேர்ந்த சம்பத் என்பவர் இருதய அடைப்பு காரணமாக உயிர் இழந்தார். இதற்கு காரணம் இந்த மருத்துவர் ரிஷி என்ற சித்தார்த்தன் என்பவர் அஜாக்கிரதையான முறையில் செயல்பட்டதாக கூறப்படுகிறது.

இறந்த சம்பத் (55) என்பவருக்கு ஆஞ்சியோ செய்த பிறகு சிகிச்சை கொடுத்ததாகவும், ஆபத்தான நிலையிலும் மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரை செய்யாமல் போன் கூட எடுக்காமல் வெளிமாநிலத்தில் இருப்பதாக கூறியதாக தெரிகிறது.

அதனை நம்பி அவரும் காத்திருந்தததன் காரணமாகவே அவர் உயிரிழந்ததாக கூறி அவரது உறவினர்கள் முற்றுகையிட்டனர். மேலும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.



இதுதொடர்பான பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...