வால்பாறை அரசு மருத்துவமனையில் மாவட்ட துணை இயக்குனர் திடீர் ஆய்வு!

வால்பாறை அரசு மருத்துவமனையில் சில மாதங்களுக்கு முன்பு நோயாளியை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் வாகனம் விபத்திற்குள்ளான நிலையில், மருத்துவமனை மற்றும் ஆம்புலன் வாகனங்களின் செயல்பாடுகள் குறித்து மண்டல துணை இயக்குநர் டாக்டர் மீரா ஆய்வு மேற்கொண்டார்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அரசு மருத்துவமனையில் மாவட்ட துணை இயக்குனர் டாக்டர் மீரா ஆய்வு மேற்கொண்டார்.

வால்பாறை பகுதியில் அரசு மருத்துவமனை பல ஆண்டுகாலமாக இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் பிரசவம் மற்றும் பொது சிகிச்சையை பொதுமக்கள் பெற்று வருகின்றனர். இந்நிலையில், மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து மண்டல துணை இயக்குநர் டாக்டர் மீரா ஆய்வு மேற்கொண்டார்.

சில மாதங்களுக்கு முன்பு நோயாளியை 108 வாகனத்தில் அழைத்து வந்து மருத்துவமனையில் சேர்ப்பதற்கு மருத்துவமனை வாயிலில் வாகனத்தை நிறுத்தியதில் வாகனம் பின்னோக்கி இயங்கி விபத்து ஏற்பட்டு சுமார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து 108 வாகன ஓட்டுனரும் நோயாளியும் விபத்தில் சிக்கினர்.

இதை தொடர்ந்து மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு வாயிலின் முன்பு 108 வாகனம் நிறுத்துவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டது.



108 வாகனம் வந்து நோயாளியை இறக்கி விடுவதை சோதனை மூலம் ஆய்வு செய்தனர்.

இதை தொடர்ந்து 108 வாகன மேலாளரும் 108 வாகனம் ஓட்டுனர்கள் ஆயிவில் இருந்தனர். தற்போது மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவமனை கட்டிடங்களை ஆய்வு செய்தார்.



ஆய்வின் போது வால்பாறை நகர மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார் மருத்துவமனை கட்டிடங்களுக்கு பாதுகாப்பு கூரை அமைக்க வேண்டும். எக்ஸ்ரே, ரத்த வங்கி, சமையலர், மருத்துவமனை காவலர் எலெக்ட்ரிசியன் மருத்துவமனைக்கு பணியாளர்கள் தேவை என்று மண்டல துணை இயக்குனரிடம் தெரிவித்தார்.

அதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக இயக்குனர் தெரிவித்தார். இந்த நிகழ்வில் வால்பாறை மருத்துவர் மருத்துவர்கள் கட்டிட ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...