கோவையில் புதிதாக சிறைச்சாலை அமைக்க உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் தலைமையில் ஆய்வு!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த பிளிச்சி பகுதியில் புதிதாக நவீன சிறைச்சாலை அமைப்பதற்காக உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் அமுதா தலைமையில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.



கோவை: கோவை மாவட்டத்தில் புதிதாக சிறைச்சாலை அமைப்பதற்காக உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மத்திய சிறைக்கு சொந்தமான இடத்தில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்பட உள்ள நிலையில், மேட்டுப்பாளையம் பிளிச்சி பகுதியில் புதிதாக சிறைச்சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் தரப்பில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.



இந்நிலையில் இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ள உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் அமுதா வருகை புரிந்திருந்தார். கோவை மத்திய சிறை வளாகத்திற்குள் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில் தற்பொழுது கோவை மத்திய சிறையில் உள்ள வசதிகள், பாதுகாப்பு வசதிகள், சிறைவாசிகளுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் ஆய்வு செய்யப்பட்டது. முன்னதாக மேட்டுப்பாளையம் பிளிச்சி பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கோவை சிறைச்சாலை என்பது ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் உள்ள சிறைச்சாலை ஆகும். எனவே இங்குள்ள கட்டமைப்புகளை போல் அல்லது இன்னும் தரம் உயர்த்தி கட்டுவதற்கு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி பேசியதாவது, கோவை மத்திய சிறைக்கு சொந்தமான இடத்தில் செம்மொழி பூங்கா அமைய உள்ளதால், வேறு இடத்திற்கான பரிந்துரை அனுப்பி இருந்தோம்.

அதன்படி உள்துறை கூடுதல் செயலாளர் அமுதா மேட்டுப்பாளையம் பிளிச்சி பகுதியில் சிறை அமைப்பதற்கான ஆய்வினை மேற்கொண்டார்.புதிதாகஅமைய உள்ள சிறைச்சாலையில் எதிர்காலத்திற்கு தேவையான அனைத்து வித வசதிகளும் உள்ள சிறையை கட்ட வேண்டும்.

கோவையில் சிறை மட்டுமல்லாது இங்கு உள்ள சிறைவாசிகளுக்கு பல்வேறு பயிற்சிகள் சிறப்பாக அளிக்கப்பட்டு வருகிறது. இதனை மேட்டுப்பாளையம் பகுதியில் எதிர்காலத்திற்கு தகுந்தாற்போல் மேம்படுத்தி கட்டுவதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தெலுங்கானாவில் தற்போது கட்டப்பட்டுள்ள சிறையையும் அவர் ஆய்வு செய்து, அனைத்து வசதிகளையும் கொண்ட மார்டன் சிறைச்சாலை கட்டுவதற்கான ஆலோசனை மற்றும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பிளிச்சியில் ஏற்கனவே சுமார் 8 ஏக்கர் அளவில் அரசு நிலம் உள்ளது. தேவைப்பட்டால் நிலம் கையகப்படுத்தப்படும். சிறையில் மனித உரிமை சம்பந்தமான ஆய்வு எதுவும் இன்று செய்யப்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.



இந்த ஆய்வில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், கோவை மத்திய சிறைதுறை கண்காணிப்பாளர் ஊர்மிளா, சிறைத்துறை துணைத் தலைவர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.



இந்நிகழ்வில் சிறைத்துறை கண்காணிப்பாளர் ஊர்மிளாவிற்கு உள்துறை கூடுதல் செயலாளர் அமுதா புத்தகங்களை வழங்கினார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...