காய்கறி விலை உயர்வால் வெறிச்சோடி காணப்படும் உக்கடம் காய்கறி மார்க்கெட்!

தக்காளி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளின் விலை அதிரடியாக உயர்ந்துள்ள நிலையில், காய்கறிகள் வாங்க வாடிக்கையாளர்கள் வராததால், எப்போது கூட்டமாக காணப்படும் உக்கடம் காய்கறி மார்க்கெட் வெறிச்சோடி காணப்படுகிறது.



கோவை: தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்வின் காரணமாக வாடிக்கையாளர்கள் வராததால், உக்கடம் காய்கறி மார்க்கெட் வெறிச்சோடி காணப்படுகிறது.



கடந்த சில தினங்களாக பருவமழை மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வர வேண்டிய காய்கறிகளின் வரத்து குறைவானதால் பல்வேறு காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.



குறிப்பாக தக்காளி சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்து காணப்படுகிறது.



அது மட்டுமின்றி இஞ்சி பீன்ஸ் ஆகியவற்றின் விலையும் அதிகரித்து உள்ளதால் எப்போதும் கூட்டம் நிறைந்து காணப்படும் உக்கடம் காய்கறி மார்க்கெட் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.

தற்போதைய விலை நிலவரத்தின் படி தக்காளி கிலோ 100 ரூபாய், ஆப்பிள் தக்காளி 120, சின்ன வெங்காயம் கிலோ 200 ரூபாய், பூண்டு கிலோ 180 ரூபாய், இஞ்சி கிலோ 260 ரூபாய், கேரட் கிலோ 60, பீட்ரூட் கிலோ 40, கத்தரிக்காய் கிலோ 50, உருளைக்கிழங்கு கிலோ 30, முருங்கைக்காய் கிலோ 50, பெரிய வெங்காயம் கிலோ 25 என விற்பனை செய்யப்படுகிறது.

அன்றாட சமையலுக்கு மிகவும் அத்தியாவசியமான தக்காளி, சின்ன வெங்காயம், இஞ்சி ஆகியவற்றின் விலை அதிகரித்தே காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் காய்கறிகளை வாங்குவதற்கு ஆர்வம் காட்டாததால் மார்க்கெட் வெறிச்சோடி காணப்படுகிறது.

தக்காளியின் விலை முந்தைய நாட்களை விட குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...