திருப்பூரில் வரும் ஜூலை 14ல் கட்டிட கட்டுமான பொருட்கள் கண்காட்சி துவக்கம்!

திருப்பூரில் வரும் ஜூலை 14ஆம் தேதி சிவில் இன்ஜினியர் அசோசியேசன் சார்பில் கட்டிட கட்டுமான பொருட்கள் கண்காட்சி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நான்கு நாட்கள் நடைபெற உள்ள இந்த கண்காட்சியை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



திருப்பூர்: திருப்பூரில் சிவில் இன்ஜினியர் அசோசியேசன் சார்பில் கட்டிட கட்டுமான பொருட்களின் கண்காட்சி வரும் ஜூலை 14ஆம் தேதி துவங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட சிவில் இன்ஜினியர் அசோசியேசன் சார்பாக வருடம் தோறும் கட்டிட கட்டுமான பொருட்களின் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். ஆண்டுதோறும் புதிய வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கட்டடங்களுக்கு தேவையான பொருட்கள் குறித்த அறிமுக விழாவாகவும் இந்த கண்காட்சி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு வருகின்ற 14-ஆம் தேதி 18-வது கட்டிட கட்டுமான பொருட்களின் கண்காட்சி துவங்கப்பட இருப்பதாகவும், 200க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்ட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு பசுமை சார்ந்த கட்டிடங்கள் மற்றும் மரபு சார்ந்த கட்டிடங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான ஸ்டால்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும், பொதுமக்கள் கட்டிடங்களுக்கு தேவையான அனைத்து வகை சேவைகளையும் ஒரே கூரையின் கீழ் பெற்றுக் கொள்ளும் வகையில் இந்த கட்டிட கட்டுமான பொருட்கள் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.



மேலும் வர்த்தகர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு இடையே இணைப்பு பாலமாக இருக்கக்கூடிய வகையில் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட இருப்பதாகவும், இதன் மூலம் இந்த ஆண்டு வர்த்தகத்தில் சிறந்து விளங்கக்கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



வருகின்ற ஜூலை 14ஆம் தேதி துவங்க உள்ள இந்த கட்டிட கட்டுமான பொருட்களின் கண்காட்சியை மாநில செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைக்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் சார்பில் புத்தக வெளியீட்டை நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் வெளியிடுகிறார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 200 முதல் 250 கோடி ரூபாய் வரையிலான வர்த்தக விசாரணை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு நாட்கள் நடைபெற உள்ள இந்த கண்காட்சிகள் கலந்து கொள்ளக்கூடிய பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குலுக்கல் முறையில் பரிசுகளும் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...