தாராபுரம் விஸ்வேஸ்வரர் கோவிலில் லிங்கத்தை சுற்றிய பாம்புக்கு பால் ஊற்றிய பக்தர்கள்!

தாராபுரத்தில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான விஸ்வேஸ்வரர் கோவிலில் லிங்கத்தை சுற்றி படுத்திருந்த ரத்த மண்டல வகையை சேர்ந்த பாம்பிற்கு பக்தர்கள் பால் ஊற்றி வழிபட்ட நிலையில், பால் ஊற்றியவர்களை பாம்பு கடிக்க வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



திருப்பூர்: தாராபுரத்தில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான விஸ்வேஸ்வரர் கோவிலில் உள்ள லிங்கத்தை சுற்றிய பாம்பை பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கோட்டைமேட்டு தெருவில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த விஸ்வேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த சில ஆண்டுகளாக வழிபாடு நடத்தப்படாமல் பூட்டப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் கோவிலுக்குள் ரத்த மண்டல வகையை சேர்ந்த பாம்பு ஒன்று செல்வதை கண்ட சிலர், உள்ளே சென்று பார்த்த பொழுது.



அந்த பாம்பு கோவிலில் உள்ள லிங்கத்தை சுற்றியபடி படுத்துக் கொண்டிருந்தது.



இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் சுவாமியை சுற்றி படுத்திருந்த பாம்பிற்கு பால் ஊற்றி வணங்கினர்.



சிறிது நேரத்தில் அந்தப் பாம்பு அங்கிருந்து ஊர்ந்து செல்ல துவங்கியது.



இதனையடுத்து அப்போது மக்கள் தாராபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் அந்தப் பாம்பை பிடித்து பிளாஸ்டிக் பைப்பிற்குள் அடைத்து வனப்பகுதியில் விடுவதற்காக எடுத்துச் சென்றனர்.



லிங்கத்தை சுற்றிய பாம்பால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...

கோவை பி.கே.புதூர் சிறுபாலத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்கு உட்பட்ட பி.கே.புதூர், பெருமாள்சாமி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலத்தின...

கோவையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா, தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கல்

கோவை கவுண்டம்பாளையம் மைதானத்தில் பி.ஜே.எம்.எம். அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய...

Systemic Corruption Persists Unabated: Coimbatore Unit of Anti-Corruption Movement

The Coimbatore district unit of the Anti-Corruption Movement submitted a representation to Tamil Nadu Chief Minister C J...

கோவை ரயில் நிலையம் அருகே சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்; போலீசார் விசாரணை

கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலையில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பர...