அம்ருத் 2.0 திட்டம் குறித்த உண்மை தன்மையை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் - பாஜக மனு!

பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் அம்ருத் 2.0 திட்டம் பற்றி மக்களுக்கு முழுமையாக உண்மை தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பெரியநாயக்கன்பாளையம் பாஜக சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.


கோவை: அம்ருத் 2.0 திட்டம் குறித்த உண்மை தன்மையை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பாஜக சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

பெரியநாயக்கன்பாளையம் பாஜக நகர மண்டல தலைவர் மகேந்திர ராஜ் தலைமையில் அம்ருத் 2.0 திட்டம் பற்றி மக்களுக்கு முழுமையாக உண்மை தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, பெரியநாயக்கன்பாளையம் சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதி மக்களுக்கு அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் குடிநீர் திட்டத்தினை மேம்படுத்த சமூக வலைத்தளமான "நம்ம பெரியநாயக்கன் பாளையம்" என்ற முகநூலில் பணிகள் தொடங்கியுள்ளது என்ற செய்தி ஒன்றாம் தேதி அன்று வெளியாகி உள்ளது.

இந்தத் திட்டத்தை பற்றி பேரூராட்சி நிர்வாகத்திடம் கேட்கும் பொழுது சரியான பதில் கிடைக்கப்பெறவில்லை என குறிப்பிட்டுள்ளனர். மேலும் இத்திட்டத்திற்காக தொடக்க விழாவோ பூமி பூஜையோ நடத்தப்படவில்லை, அறிவிப்பு பலகையும் வைக்கப்படவில்லை அதன் மதிப்பீடும் தெரியப்படவில்லை.

இந்த திட்டமானது எப்பொழுது துவங்கப்படும்? இத்திட்டம் மத்திய அரசின் திட்டமா அல்லது மாநில அரசின் திட்டமா என்று மக்களுக்கு முழுமையாக தெரியவில்லை எனவும் இதன் உண்மை தன்மையை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...

கோவை பி.கே.புதூர் சிறுபாலத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்கு உட்பட்ட பி.கே.புதூர், பெருமாள்சாமி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலத்தின...

கோவையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா, தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கல்

கோவை கவுண்டம்பாளையம் மைதானத்தில் பி.ஜே.எம்.எம். அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய...