கோவையில் சமீப காலமாக சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கரவாகனங்கள் திருடு போனது. கண்காணிப்பு காமிராக்களில் பதிவான கட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இருந்த போதும் இரு சக்கர வாகன கொள்ளையர்கள் போலீசாரிடம் சிக்காமல் டிமிக்கி காட்டி வந்தனர்.
இந்த நிலையில், ரேஸ் கோர்ஸ் சாலை , பிக்பஜார் சந்திப்பு ஆகிய இடங்களில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, முன்னுக்குப் பின் முரணாக பேசிய 5 வாலிபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது, சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த சில்வானா சாந்தகுமர், காலக்குமார் சூலூரை சேர்ந்த கோபால கிருஷணன், பட்டணம் பகுதியை சேர்ந்த அசோக், நீலிக்கோணாம் பாளையம் பகுதியை சேர்ந்த நாகராஜ் ஆகிய வாலிபர்கள் கும்பலாக இருசக்கன வாகனங்களை திருடியது தெரியவந்தது.
தொடர்ந்து, அவர்களிடம் இருந்து 34 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், ஐந்து வாலிபர்களையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.