கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் மீது திமுக சார்பில் போலீசில் புகார்!

கடந்த 29ஆம் தேதி பாஜக கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள், எம்.எல்.ஏக்கள் பற்றி அவதூறாக பேசியதாக கோவை தெற்கு பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் மீது திமுக வழக்கறிஞர்கள் அணியினர் கோவை ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.



கோவை: திமுக கவுன்சிலர்கள், எம்.எல்.ஏக்கள் பற்றி அவதூறாக பேசியதாக கோவை தெற்கு பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் மீது திமுக சார்பில் ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 29 ஆம் தேதி கோவை வி.கே.கே மேனன் சாலையில் பாஜக சார்பில் பிரதமர் மோடியின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பேசும்போது, திமுக கவுன்சிலர்கள், எம்.எல்.ஏ க்களை பற்றி அவதூறான கருத்துகளை பதிவு செய்ததாகவும், மேலும் திமுக கட்சியை குறித்தும் பேசியதாக கூறப்படுகிறது.

வானதி சீனிவாசன் பேசிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் திமுக கட்சி மற்றும் மக்கள் பிரதிநிதிகள் குறித்து அவதூறான வகையில் பேசிய வானதி சீனிவாசன் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக வழக்கறிஞர்கள் அணியினர் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தனர்.

இதையடுத்து நாளை கோவை மாவட்டம் முழுவதும் திமுக பகுதி நிர்வாகிகள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...