ரூ.50 துடைப்பத்தை ரூ.440 என தீர்மானம் நிறைவேற்றியிருப்பதே திமுக ஆட்சியின் நேர்மை நிர்வாகத்திற்கு உதாரணம்!

திருப்பூரில் நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் ரூ.50 மதிப்புள்ள துடைப்பத்தை ரூ.440 என தீர்மானம் நிறைவேற்றி வாங்கி இருப்பதே திமுக ஆட்சியின் நேர்மையான நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டு என கூறினார்.



திருப்பூர்: ரூ.50 மதிப்புள்ள துடைப்பத்தை ரூ.440 என தீர்மானம் நிறைவேற்றி வாங்கி இருப்பதே திமுக ஆட்சியின் நேர்மையான நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டு என முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். 



விலைவாசி உயர்வு மற்றும் அமலாக்கத்துறை விசாரணையின் கீழ் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக மாநகர் மாவட்ட அதிமுக சார்பாக மாநகர மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டப்பேரவை துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 



இதில் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு எதிராக அதிமுகவினர் கோஷங்கள் எழுப்பி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 



ஆர்ப்பாட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது, 







தமிழகத்தில் அரசு மதுபான கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் மூலம் அரசு ஆண்டுக்கு 4000 கோடி ரூபாய் ஊழல் செய்து வருகிறது. பாட்டில் முதல் டம்ளர் வரை அனைத்திலும் ஊழல் செய்யும் திமுக அரசை மக்கள் அப்புறப்படுத்துவதற்கு தொடக்க போராட்டமாக இந்நாளை கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. 

திமுக ஆட்சியை அகற்றும் வரை இந்த போராட்டம் தொடரும். திருப்பூர் மாநகராட்சியில் 50 ரூபாய் மதிப்புள்ள துடைப்பத்தை 440க்கு தீர்மானம் நிறைவேற்றி மாநகராட்சி நிர்வாகம் வாங்கி இருப்பதன் மூலம் மாநகராட்சியின் நேர்மையான நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. இதுபோல அனைத்து வகையிலும் திமுக அரசு ஊழல் செய்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...