சூலூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது - 7.5 கிலோ கஞ்சா பறிமுதல்!

சூலூர் அடுத்த தென்னம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கர்ண ஜக்டேல் (28) மற்றும் பிரகாஷ் பாக்(22) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 7.5 கிலோ அளவிலான கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர்.



கோவை: கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 7.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். 

அதன் அடிப்படையில் சூலூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் சம்பவ இடமான தென்னம்பாளையம் பேருந்து நிலையம் அருகே விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். 

அப்போது கஞ்சாவை வைத்திருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ரதி ஜக்டேல் என்பவரது மகன் கர்ண ஜக்டேல் (28) மற்றும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சான் பாக் என்பவரது மகன் பிரகாஷ் பாக்(22) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் அவர்களிடமிருந்து 7.5 கிலோ அளவிலான கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

இதனை அடுத்து கைது செய்யப்பட்ட நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கையின் பேரில் கடந்த 01.01.2023 முதல் தற்போது வரை கோவை மாவட்ட காவல்துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சோதனைகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 355 நபர்கள் மீது 265 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களிடமிருந்து சுமார் 536.681 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் அல்லது சட்டம் ஒழுங்கிற்கு எதிராக செயல்படுபவர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள்.

கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் - 94981 81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081 - 00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...