'காட்டன் கார்ப்பரேசன் தமிழ்நாடு' துவங்கும் திட்டம் உள்ளது - அமைச்சர் காந்தி தகவல்

கோவை குறிச்சி பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் காந்தி, காட்டன் கார்ப்பரேசன் இந்தியா போல காட்டன் கார்ப்பரேசன் தமிழ்நாடு என துவங்கும் திட்டம் இருக்கிறது. ஆனால் போதிய நிதி இல்லாததால் துவங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது எனக் கூறினார்.



கோவை: காட்டன் கார்ப்பரேசன் இந்தியா போல காட்டன் கார்ப்பரேசன் தமிழ்நாடு என்ற அமைப்பை தொடங்கும் திட்டம் தமிழக அரசிடம் உள்ளது என கைத்தறித்துறை அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.

தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கோவை சுந்தராபுரம் சிட்கோ பகுதியில் உள்ள தமிழ்நாடு பஞ்சாலை கழக தறிக்கூடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனை தொடர்ந்து அமைச்சர் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் பேசியதாவது,







கோவையில் ஆய்விற்காக வந்தோம். தமிழ்நாடு பஞ்சாலை கழகம் மூலம் ஏர் ஜெட் இயந்திரம் உதவியுடன், பள்ளி மாணவர்களுக்கான 9 லட்சம் மீட்டர் பள்ளிச் சீருடை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

ஏர்ஜெட் இயந்திரம் மூலம் உற்பத்தியை பெருக்க என்னென்ன தேவை இருக்கிறது, குறை இருக்கிறது என்பதை நேரில் கேட்டு ஆய்வு செய்துள்ளோம். 

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்த இரண்டு வருடங்களில் இந்த துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இதுவரை யாரும் செய்யாத அளவிற்கான பணிகள் செய்யப்பட்டுள்ளது. பழைய விசைத்தரி இயந்திரங்களை எடுத்துவிட்டு ஏர்ஜெட் இயந்திரங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இப்போது கோவையில் 12 ஏர்ஜெட் இயந்திரங்கள் இருக்கின்றது. மேலும் 12 ஏர்ஜெட் இயந்திரங்கள் கூடுதலாக அமைக்கபட இருக்கின்றது. உற்பத்தியை பெருக்க இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

ஏர்ஜெட் இயந்திரம் அமைப்பதோடு அந்த இயந்திரத்திற்கு தேவையான மின்சாரத்தை சோலார் சக்தியின் மூலம் பெற உள்ளோம். கடன் வாங்கி இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டாலும், 25 ஆண்டுகளுக்கு உத்திரவாதம் கொடுக்கின்றனர்.

கூடுதல் இயந்திரங்கள் மூலம் வரும் உற்பத்தி லாபத்தை கொண்டு 5 ஆண்டுகளுக்கு கடன் கட்டினால் அதன் பிறகு மின்சாரம் செலவு இல்லாமல் 15 ஆண்டுகளுக்கு லாபமாக இருக்கும். இதன் மூலம் வருங்காலத்தில் இந்த துறை லாபம் இருக்கும் துறையாக மாறும்.

தமிழகத்தில் 18 ஸ்பின்னிங் மில்களில் இருந்தது. இதில் 12 மூடப்பட்டுள்ளது. 6 மில்கள் தான் தற்போது இயங்குகின்றது. அதுவும் தமிழக முதல்வர் ஆட்சி பொறுப்பு ஏற்கவில்லை என்றால் அந்த 6 மில்களும் மூடப்பட்டிருக்கும்.

தற்போது அந்த மில்களும் கொஞ்சம் கொஞ்சமாக லாபத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. நம்மிடம் இயங்காமல் இருக்கும் 12 மில்லிற்கு மட்டும் 486 ஏக்கர் நிலம் இருக்கிறது. மணல்மேட்டில் உள்ள மில் 20 வருடமாக மூடி இருக்கிறது. 34 ஏக்கர் நிலம் அதற்கு இருக்கின்றது.

அதை மினி ஜவுளி பூங்கா போன்று என்ன பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் என ஆலோசனை மேற்கொண்டோம். 5 தேசிய பஞ்சாலை கழக ஆலைகள் மூடி இருக்கிறது.

கோவையில் முக்கிய இடத்தில் 2 உள்ளது. அதை நாம் எடுக்க முடியாது. தற்போது நமது துறை மூலம் என்ன செய்ய முடியுமோ அதை மிக சிறப்பாக செய்கிறோம். மொத்தமாக 125 லட்சம் பேல் பஞ்சு தமிழகத்திற்கு தேவை. 15 லட்சம் பேல்கள் இங்கு உற்பத்தியாகின்றது. காட்டன் கார்ப்பரேசன் பஞ்சு எல்லாம் வடமாநிலங்களில் உள்ள குடோனில் இருந்து வருகின்றது. மேலும் தென்னிந்திய பஞ்சாலை சங்கம் உள்ளிட்ட சங்கங்களுடன் ஆலோசனை மேற்கொண்டோம்.

அப்போது வடமாநிலம் சென்று பஞ்சு வாங்கி வருவதால் அதிக செலவு ஏற்பட்டு வருவதாகவும், தமிழக அரசால் விதிக்கப்படும் செஸ் வரியை நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அவை முதல்வர் பரிசீலனை செய்து உடனடியாக நீக்கினார். 

ஆனால் காட்டன் விலையை நாம் நிர்ணயம் செய்ய முடியாது, அது மத்திய அரசின் கையில் உள்ளது. 

காட்டன் கார்ப்பரேசன் இந்தியா போல காட்டன் கார்ப்பரேசன் தமிழ்நாடு என ஆரமிக்கும் திட்டம் இருக்கிறது. ஆனால் போதிய நிதி இல்லாததால் துவங்குவதில் காலதாமதம் இருக்கிறது. அது அமைந்து விட்டால் பருத்தியை நாம் வாங்கி இருப்பு வைத்து பருத்தி விலையை நம் கட்டுப்பாட்டில் வைக்க முடியும்.

அதே போல மில்களில் வட மாநில தொழிலாளர்கள் அதிகளவு உள்ளது குறித்த கேள்விக்கு, தமிழக தொழிலாளர்கள் வருவதில்லை, அனைவருக்கு இங்கு பணி வழங்கப்படுகிறது.

ரயில்வே துறையில் இங்குள்ளவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல், மொழி தெரியாதவர்கள் தமிழகத்தில் பணிக்கு வைத்துள்ளது போல இல்லாமல், அனைவருக்கும் வேலை வழங்கப்படுகிறது.

இவ்வாறு அமைச்சர் காந்தி தெரிவித்தார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...