கோவையில் ‘கிராஃப்ட் பஜார் 2023’ என்ற கைவினை பொருட்கள் விற்பனை, கண்காட்சி துவக்கம்!

கோவை - அவிநாசி சாலையில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில், ‘கிராஃப்ட் பஜார் 2023’ என்ற கைவினை பொருட்கள் விற்பனை, கண்காட்சி துவங்கியுள்ளது. ஜுன் 16-ந் தேதி முதல் 21-ந்தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில், நாடு முழுவதிலும் உள்ள கைவினை தொழில் செய்பவர்கள் தங்கள் பொருட்களை காட்சிப்படுத்தவும், விற்பனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



கோவை: கோவை - அவிநாசி சாலையில் ‘கிராஃப்ட் பஜார் 2023’ என்ற தலைப்பில் கைவினை பொருட்கள் விற்பனை மற்றும் கண்காட்சி துவங்கியுள்ளது. 

கிராப்ட்ஸ் கவுன்சில் ஆப் தமிழ்நாடு 1988 ஆம் ஆண்டு கோவையில் தொடங்கப்பட்டது. இந்திய கைவினைஞர்கள் மற்றும் நெசவாளர்களை ஊக்குவிப்பதே இந்த அமைப்பின் முக்கிய நோக்கம். 



“கிராப்ட் பஜார்" மூலம் இந்தியா முழுவதிலும் உள்ள கைவினைத் தொழில் செய்பவர்களுக்கு ஜவுளி மற்றும் கைவினை பொருட்கள் தங்கள் பொருட்களை காட்சிப்படுத்தவும், விற்பனை செய்யவும் ஒரு தளத்தை கிராப்ட் பஜார் வழங்குகிறது. 



இந்த ஆண்டு அஸ்ஸாம் முதல் கேரளா வரை 100க்கும் மேற்பட்ட விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 



கலைபொருட்கள், ஓவியங்கள், கைவினைபொருள் அரங்கு, பித்தளை, கண்ணாடி மற்றும் மர கலைபொருட்கள், மணிகள், லாக் அண்டு கண்ணாடி வளையல்கள், டோக்ரா, ஜூடிஸ், நாணல் மற்றும் கழிவு துணி பாய்கள், உலர் பூக்கள், பாண்டிச்சேரியில் இருந்து விளக்கு நிழல்கள், உலோகம், டெரகோட்டா, கல்சட்டி, மினியேச்சர் மண்பாண்டங்கள், நீல மண்பாண்டங்கள், உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.



கோவை - அவினாசி சாலையில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில் இன்று காலை துவங்கிய இக்கண்காட்சியை தஸ்கரி ஹாத் சமிதிரூ தில்லி ஹாத் அறக்கட்டளை நிர்வாகி ஜெயா ஜேட்லி துவக்கி வைத்தார். இதில் கிராப்பட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு கோவை கிளை நிர்வாகிகிள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...