காஷ்மீர்‌ வேளாண்‌ பல்கலை. -‌ கோவை வேளாண் பல்கலை. இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

கோவை தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகம் மற்றும் ஜம்முவின்‌ ஷைர்‌-இ-காஷ்மீர்‌ வேளாண்‌ அறிவியல்‌ மற்றும்‌ தொழில்நுட்ப‌ பல்கலைக்கழகம்‌ ‌இடையே ஸ்ரீநகரில் கடந்த மே 15ஆம் தேதி சாண்ட்விச்‌, ட்வின்னிங் திட்டத்தின்‌ கீழ்‌ முதுகலை மாணவர்களின்‌ ஆராய்ச்சியை எளிதாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்‌ (MoU) கையெழுத்தானது.

கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் காஷ்மீரில் உள்ள ஷைர்-இ-காஷ்மீர்‌ வேளாண்‌ அறிவியல்‌ மற்றும்‌ தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களுடன்‌ புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இதுதொடர்பாக கோவை வேளாண் பல்கலை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கோவை தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகம் மற்றும் ஜம்முவின்‌ ஷைர்‌-இ-காஷமீர்‌ வேளாண்‌ அறிவியல்‌ மற்றும்‌ தொழில்நுட்ப‌ பல்கலைக்கழகம்‌ ‌இடையே ஸ்ரீநகரில்‌ 15.05.2023 அன்று சாண்ட்விச்‌, ட்வின்னிங் திட்டத்தின்‌ கீழ்‌ முதுகலை மாணவர்களின்‌ ஆராய்ச்சியை எளிதாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்‌ (MoU) கையெழுத்தானது.

முதன்மையாக இருவேறு நிறுவனங்களுக்கிடையய கல்வி மற்றும்‌ ஆராயச்சி ஒத்துழைப்பை வளர்ப்பது, சாண்ட்விச்‌, ட்வின்னிங்‌ திட்டத்தின்‌ மூலம்‌ முதுகலை மாணவர்கள்‌ பரிமாற்றத்தை‌ தொடங்குவது போன்ற அம்சங்களை இரு பல்கலைக்கழகங்களும்‌ கூட்டாக ஒப்புக்‌ கொண்டன.

இதில்‌ பங்குபெறும்‌ மாணவர்கள்‌ தங்கள்‌ பட்டப்படிப்பு பின்‌ ஒரு பகுதியை ஒரு பல்கலை கழகத்திலும்‌ மற்றொரு பகுதியை மற்றும்‌ ஒரு பல்கலை கழகத்திலும்‌ முடிக்க வேண்டும்‌.

இந்த ஒப்பந்தத்தில், தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக பதிவாளர்‌, முனைவர்‌ இரா. தமிழ்வேந்தன்‌,

ஜம்மு ஷைர்‌-இ-காஷ்மீ ர்‌ வேளாண்‌ அறிவியல்‌ மற்றும்‌ தொழில்நுட்பப்‌ பல்கலைக்கழக பதிவாளர்‌, முனைவர்‌ சுஷில்குமார்‌ குப்தா மற்றும்‌ காஷ்மீர்‌ ஷைர்‌-இ-காஷ்மீ ர்‌ வேளாண்‌ அறிவியல்‌ மற்றும்‌ தொழில்நுட்பப்‌ பல்கலைக்கழக பதிவாளர்‌, டி.எச்‌. மசூதி ஆகியோர்‌ மாணவர்களின்‌ நலனுக்கான ஒப்பந்தத்தில்‌ கையெழுத்திட்டனர்‌.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக துணைவேந்தர்‌ முனைவர்‌ வெ.கீதாலட்சுமி, ஐம்மு மற்றும்‌ காஷ்மீரின்‌ ஷைர்‌-இ-காஷீமீர்‌ வேளாண்‌ அறிவியல்‌ மற்றும்‌ தொழில்நுட்ப‌ பல்கலைக்கழகத்தின்‌ துணைவேந்தர்‌ பேராசிரியர்‌ நசீர் அகமது கனய் ஆகியோர்‌ முன்னிலையில்‌ இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தின்‌ முதுகலை பட்டமேற்படிப்பு பயிலக முதன்மையர்‌ முனைவர்‌ ந.செந்தில்‌, வேளாண்மை முதன்மையர்‌ முனைவர்‌ ந.வெங்கடேச பழனிச்சாமி, ஒருங்கிணைப்பாளர்‌ (ஜஐடிபி) முனைவர்‌ எஸ்‌.டி. சிவக்குமார்‌ மற்றும்‌ இருதரப்புகளின்‌ பிரதிநிதிகளும்‌ இக்கையொப்பமிடும்‌ நிகழ்வில்‌ கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்‌.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...