கோவையில் உள்ள 14 காவல்நிலையங்களுக்கு டேப்களை வழங்கிய காவல் ஆணையர்!

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் படி, காவல்நிலையங்களை தொழில்நுட்ப ரீதியில் மேம்படுத்துவதற்காக கோவையில் உள்ள 14 காவல் நிலையங்களுக்கு தலா 3 என 42 டேப்களை (Tablet PC) கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இன்று வழங்கினார்.



கோவை: கோவை மாநகரில் உள்ள 14 காவல் நிலையங்களுக்கு தலா 3 டேப்களை (Tablet PC) மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் வழங்கினார். 

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் அதிக வழக்குகள் பதிவாகும் காவல் நிலையங்களுக்கு இ-பீட் ரோந்து மற்றும் இதர பணிகளுக்காக டேப் (tab) வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாநகரில் 14 காவல் நிலைங்களுக்கு தலா 3 டேப்கள் வழங்கப்பட்டுள்ளது. 



இதனை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இன்று வழங்கினார். 

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது,



தற்போது காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்களுக்கு இந்த டேப்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 3 செயலிகள் உள்ளது, அதன் மூலம் குற்றவாளிகளை கண்காணிக்கவும், சந்தேகப்படும் குற்றவாளிகளை உடனடியாக அடையாளம் காண இவை உதவும்.

வேறு தனிப்பட்ட விஷயங்களுக்கு டேப் (tab) ஐ பயன்படுத்த முடியாது. கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரவுண்டானாக்கள், u turn கள் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 



காற்று மாசுவில் இருந்து போக்குவரத்து காவலர்கள் காக்க உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

பள்ளிகள் திறக்கும் நாளில் அனைத்து பள்ளிகள் முன்பும் நோட்டீஸ்கள் வழங்கி பிரச்சனை என்றால் அணுக வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளோம். கல்லூரிகளில் புத்தாக்கம் பயிற்சி நிகழ்ச்சிகளின் போதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

கோவை மாநகரில் கடந்த ஆண்டை விட 10 சதவீதம் விபத்துகள் குறைந்துள்ளன. சிக்னல் இல்லாமல் ரவுண்டாணாக்கள் மாற்றப்பட்டுள்ளதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதைப்பொருள் விற்பனை செய்த கும்பலை பிடித்து விட்டோம். புதிய கும்பல்களையும் கண்காணிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...