திருப்பூரில் சாய ஆலை நச்சு வாயுவால் குழந்தைகள் பாதிப்பு - எம்.எல்.ஏ, ஆட்சியர் நேரில் ஆய்வு!

திருப்பூர் வெங்கமேட்டில் உள்ள துணிகளை சாயம் ஏற்றும் ஆலையில் இருந்து வெளியேறிய நச்சு வாயுவால் குழந்தைகள் வாந்தி உள்ளிட்ட உடல் உபாதைகளுக்கு ஆளான நிலையில், பாதிக்கப்பட்ட குழந்தைகளை திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ செல்வராஜ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் ஆலையில் ஆய்வு மேற்கொண்டனர்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியில் உள்ள சாய ஆலையிலிருந்து நச்சு வாயு வெளியேறி குழந்தைகள் பாதிக்கப்பட்ட நிலையில், திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ செல்வராஜ் மற்றும் ஆட்சியர் கிறிஸ்துராஜ் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

வெங்கமேடு பகுதியில் துணிகளுக்கு சாயம் ஏற்றும் தனியார் ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு துணிகளுக்கு சாயம் ஏற்றப்பட்ட பின்பு கழிவு நீரை சுத்தகரிக்காமல் வைக்கப்பட்டதால் நீரிலிருந்து வெளியேறிய நச்சு வாயுவால் அப்பகுதியில் உள்ள குழந்தைகள் உட்பட பெரியவர்களுக்கு வாந்தி உள்ளிட்ட உடல் உபாதைகள் நேற்று இரவு முதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.



இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்த பின்பு இன்று காலை மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்கள் மூலம் அப்பகுதியில் உடல் உபாதைக்கு உள்ளான குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இச்சம்பவம் குறித்து அறிந்த திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் சம்பவ இடத்திற்கு வந்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட குழந்தைகளை தனது வாகனத்தின் மூலம் உடனடியாக தனியார் மருத்துவமனையில் முழு பரிசோதனை மேற்கொள்ள அனுப்பி வைத்தார்.



இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் கிரியப்பனவர், திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட பகுதி மற்றும் ஆலையில் நேரடி ஆய்வு மேற்கொண்டனர்.



இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் கூறியதாவது, முதற்கட்டமாக பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எந்த வித பாதிப்புகளும் ஏற்படாத நிலையில் இந்த பகுதி முழுவதுமே உள்ள அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் குற்றச்சாட்டுக்கு உள்ளான சம்பந்தப்பட்ட ஆலையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆலையின் கழிவு நீர் மற்றும் சுத்தகரிக்கப்பட்ட நீரினை ஆய்விற்காக எடுத்துச் சென்றனர். ஆய்வு முடிவுகள் வரும் வரை ஆலையை தற்காலிகமாக செயல்பட தடை விதித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...