நெடுவாசல் மக்கள் உணர்வுகளை மதிக்காமல் மத்திய அரசு செயல்படுகிறது -சி.பி.எம் மத்திய குழு உறுப்பினர் வாசுகி

கோவை புலியகுளம் பகுதியில் மாற்று அரசியலை முன்வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மண்டல பிரச்சார இயக்கத்தில் கலந்துக் கொண்ட சி.பி.எம் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசுகையில் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை கேரள அரசு கைவிடவேண்டும் எனவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதுதான் பிரச்சினைக்கு தீர்வு என வலியுறுத்தினார். ஈசா யோகா மையம் எல்லா விதமான விதி முறைகளையும் மீறியுள்ளது எனவும், விதி முறைகளை மீறி் செயல்பட்ட ஈசா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ், ஈசா  நிர்வாகிகள், நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள், உடந்தையாக இருந்த அமைச்சர்கள் என அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். 

நெடுவாசல் மக்கள் உணர்வுகளை மதிக்காமலும், மாநில அரசுசின் அனுமதி பெறாமல் மத்திய அரசு செயல்படுவது கூட்டாச்சி தத்துவத்திற்கு எதிரானது என குற்றம்சாட்டினார். நீட் தேர்வு இருக்கிறதா, இல்லையா என்ற கேள்விக்குறியோடு மாணவர்கள் இருப்பதால் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தெளிவுப்படுத்த வேண்டும் என்று வாசுகி வலியுறுத்தினார்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...