கிணத்துக்கடவு சர்வீஸ் சாலையில் குடிநீர் குழாய் உடைந்து ஏற்படும் பள்ளம் - வாகன ஓட்டிகள் அவதி!

கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட் அருகேயுள்ள சர்வீஸ் சாலையில் டி.இ.எல்.சி., பள்ளி எதிரே அடிக்கடி குடிநீர் குழாய் உடைந்து பள்ளம் ஏற்படுவதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகும் நிலையில், நெடுஞ்சாலை தரப்பில் நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை: கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட் அருகேயுள்ள சர்வீஸ் சாலையில் மீண்டும் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டுனர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முக்கிய பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டது. இதில், கிணத்துக்கடவு பகுதியில் கோதவாடி பிரிவு முதல் அரசம்பாளையம் பிரிவு வரை பாலம் அமைக்கப்பட்டது.

இந்த பாலத்தின் கீழ் பகுதியில் சர்வீஸ் சாலையும் அமைக்கப்பட்டு உள்ளது. கிணத்துக்கடவு பகுதியில் உள்ள சர்வீஸ் சாலையில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனகள் சென்று வருகின்றன.

இந்நிலையில், டி.இ.எல்.சி., பள்ளி எதிரே அடிக்கடி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு, அதிக அளவு தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால் அங்கு பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் நிரம்பியுள்ளது. அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது.

இந்த பிரச்னையை சரி செய்ய தேசிய நெடுஞ்சாலைத்துறை தரப்பில், மண் கொட்டி அவ்வப்போது சரி செய்யப்பட்டு வந்தது. ஆனால் மீண்டும் மீண்டும் குழாய் உடைந்து, சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது.

இந்த சாலையை தற்காலிகமாக சரி செய்யாமல், நிரந்தர தீர்வு கான தேசிய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் குழாய் தரமின்றி இருந்தால், புதிதாக மாற்றி அமைக்க வேண்டும், என, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...