உதகை அருகேயுள்ள நியாயவிலை கடைகளில் ஆட்சியர் திடீர் ஆய்வு!

நீலகிரி மாவட்டம் உதகை, நொண்டிமேடு, பாம்பே கேசில் பகுதிகளில் உள்ள கூட்டுறவு நிறுவனம், நியாய விலை கடைகளில், மாவட்ட ஆட்சியர் அம்ரித் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரிசி, சர்க்கரை உள்ளிட்டவற்றின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.



நீலகிரி: உதகை அருகேயுள்ள பல்வேறு நியாய விலை கடைகளில் மாவட்ட ஆட்சியர் அம்ரித் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குவதில் முக்கிய பங்காற்றி வரும் பொது விநியோக திட்டத்தினை வலுப்படுத்துவதன் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு நேரடியாக உதவ முடியும் என்பதன் அடிப்படையில் தமிழக அரசு நியாய விலை கடைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறது. 

இந்நிலையில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் உதகை, நொண்டிமேடு மற்றும் பாம்பே கேசில் பகுதிகளில் உள்ள கூட்டுறவு பண்டகசாலை மற்றும் நியாய விலை கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது, விற்பனை முனைய எந்திரத்தில் நடப்பு மாதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள், விநியோகம் செய்யப்பட்ட எண்ணிக்கை, மீதமுள்ள அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு, ராகி, பாமாயில், பொருட்கள் இருப்பு மற்றும் பொருட்களின் தரம், எடை அளவு ஆகியவற்றினை நேரில் பார்வையிட்டார்.

மேலும், அத்தியாவசிய பொருட்களின் விலைப்பட்டியல் பொதுமக்களுக்கு தெரியும் வகையில் காட்சி படுத்தப்பட்டு உள்ளதா? என்பதனையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, உதகை வட்டாட்சியர் ராஜசேகர், நியாய விலை கடை பணியாளர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...