ஆனைமலை அருகே கிணற்றில் தவறி விழுந்து கூலி தொழிலாளி பலியான சோகம்!

ஆனைமலை அருகேயுள்ள காளியாபுரத்தை சேர்ந்த காளிமுத்து என்பவர் மது அருந்திவிட்டு, ராசுகவுண்டன் தோட்டத்தில் உள்ள கிணற்றுக்கு அருகே அமர்ந்திருந்த போது தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை மாவட்டம் ஆனைமலை அருகே குடிபோதையில் இளைஞர் ஒருவர் கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள காளியாபுரத்தை சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மகன் முருகேசன் (26). கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி காளிஸ்வரி என்ற மனைவி உள்ளார். 

இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 வருடங்களுக்கு முன்பு முருகேசனை அவரது மனைவி காளீஸ்வரி பிரிந்து சென்றார். இதனால் முருகேசன் மட்டும் தனியாக வசித்து வந்தார். மனைவி பிரிந்து சென்ற பிறகு முருகேசன் ராசு கவுண்டன் தோட்டத்தில் தனது உறவினரான சிவராசு என்பவருடன் தங்கி வேலை பார்த்து வந்தார்.

மனைவி பிரிந்ததால் மது பழக்கத்திற்கு அடிமையான அவர் குடித்து கொண்டு தோட்டத்திற்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். சம்பவத்தன்று முருகேசன் மது குடித்து விட்டு, தோட்டத்திற்கு வந்தார். பின்னர் அங்குள்ள கிணற்று மேட்டில் அமர்ந்திருந்த போது குடிபோதையில் இருந்த முருகேசன், எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. 

இதில் தண்ணீரில் மூழ்கிய அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த ய தகவல் அறிந்ததும் போலீசார் 

விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேட்டைக்காரன்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...