கோவையில் 500 கிலோ ரேஷன் அரிசியை கடத்திச் சென்ற நபர் கைது - போலீசார் விசாரணை!

கோவை - பாலக்காடு சாலையில் உள்ள சுகுணாபுரம் பகுதியில் குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையின் போது வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்ததில் 500 கிலோ ரேஷன் அரிசியை கடத்திச் சென்ற நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



கோவை: கோவை அடுத்த சுகுணாபுரம் பகுதியில் 500 கிலோ ரேஷன் அரிசியை கடத்திச் சென்ற நபரை குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல்துறை தலைவராக காமினி பொறுப்பேற்ற பிறகு தமிழகம் முழுவதிலும் பொது விநியோக திட்ட ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி மேற்பார்வையில் பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசார் இன்று காலை 5 மணிக்கு கோவை - பாலக்காடு சாலையில் சுகுணாபுரம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.



அப்போது, அவ்வழியாக வந்த TN 09 D 0909 என்ற பதிவெண் கொண்ட காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் தமிழக அரசால் பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தலா 25 கிலோ எடை கொண்ட 20 வெள்ளை நிற மூட்டைகள் என மொத்தம் 500 கிலோ ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டது.



இதனையடுத்து வாகன உரிமையாளரான கோவை தெற்கு உக்கடம் பகுதியை சேர்ந்த அஜ்மல் (19) என்பவரை கைது செய்து விசாரணை செய்தபோது இவர் உக்கடம் சுற்றுவட்டார பகுதி பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கேரளாவில் உள்ள கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய கடத்தி சென்றது தெரியவந்தது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபரை போலீசார் நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...