பாஜக மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் பிறந்தநாள் - கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளிப்பு!

பாஜக மாநில பொதுச்செயலாளரான ஏ.பி.முருகானந்தத்தின் பிறந்தநாளை முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த 10 பெண் குழந்தைகள் உட்பட 11 குழந்தைகளுக்கு பாஜக சார்பில் தங்க மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது.



கோவை: பாஜக மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் பிறந்தநாளை முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளிக்கப்பட்டது. 

பாஜக மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பாஜகவினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். 



அதன் ஒரு பகுதியாக கோவையில் பாஜக பிரச்சார பிரிவின் மாநில செயலாளர் வி.என்.ராஜன் தலைமையில் கோவை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த 10 பெண் குழந்தைகள் உட்பட 11 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது. 

அதனைத்தொடர்ந்து சங்கனூர் பகுதியில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், மாவட்ட பொது செயலாளர் ரமேஷ் குமார் முன்னாள் மாவட்ட துணை தலைவர் மதன்மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...