மோசடி கும்பலின் வங்கி கணக்குகளில் இருந்த ரூ.2.39 கோடி முடக்கம் - கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் அதிரடி!

கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ராஜா என்பவர் ஆன்லைன் மோசடி கும்பலின் வலையில் சிக்கி, ரூ.23.82 லட்சத்தை இழந்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வந்த சைபர் கிரைம் போலீசார். மோசடி நபர்களின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.2.39 கோடியை முடக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: ஆன்லைன் மோசடி கும்பலின் வங்கி கணக்கில் உள்ள ரூ.2.39 கோடியை கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை அதிரடியாக முடக்கியுள்ளது.

கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜா. இவர் இணையதளத்தில் பகுதி நேர வேலை தேடி வந்தார். அவருக்கு சமூக வலைதளமான டெலிகிராம் செயலியில் இருந்து ஒரு லிங்க் வந்தது. அதை கிளிக் செய்த போது இணையத்தில் சிறிய வேலைகளை செய்தால் அதற்கு நிறைய பணம் கிடைக்கும் என்று ஆசை காட்டியுள்ளனர். 

அதனை நம்பி சிறிய அளவில் முதலீடு செய்த அவருக்கு பணமும் வந்தது. இதையடுத்து நாங்கள் சொல்வது போல் நிறைய பணம் முதலீடு செய்தால் இன்னும் பல மடங்கு லாபம் கொட்டும் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். அதை நம்பிய ராஜா ரூ.23.82 லட்சத்தை டெலிகிராம் செயலின் மூலம் முதலீடு செய்தார். 

ஆனால் அதன் பிறகு அவருக்கு எந்த பணமும் வரவில்லை, இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இந்த நிலையில், எஸ்.பி.பத்ரிநாராயணன் உத்தரவின் பெயரில் விசாரணை நடத்திய போலீசார் மோசடி பேர்வழிகளின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்தனர். 

அந்த வங்கி கணக்குகளில் பலரிடமிருந்து மோசடியாக பெறப்பட்ட ரூ.2.39 கோடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தத் தொகையை அப்படியே முடக்கி வைக்கப்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட ராஜாவுக்கு உரிய பணத்தை பெற்று தர போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

இந்நிலையில், பொதுமக்கள் மோசடி கும்பலின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற கூடாது என போலீசார் எச்சரிக்கின்றனர்.

Newsletter

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...