தாராபுரம் அருகே விபத்தில் சிக்கிய நபரை காப்பாற்ற உதவிய அமைச்சர் மற்றும் ஆட்சியருக்கு குவியும் பாராட்டு!

தாராபுரம் அருகே விபத்தில் படுகாயம் அடைந்த நபரை மீட்டு உரிய சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர்.மு.பெ. சாமிநாதன் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் ஆகியோருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


திருப்பூர்: விபத்தில் சிக்கிய நபரை காப்பாற்ற உதவிய அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் ஆகியோருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இருந்து சேலம் மாவட்டம் எடப்பாடி செல்வதற்காக நான்கு பேர் காரில் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் தாராபுரம் அடுத்த காங்கேயம் அருகே வந்து கொண்டிருந்த பொழுது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடது பக்கம் விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் காரில் பயணம் செய்த இருவர் படுகாயம் அடைந்தனர். மற்ற இருவர் காயம் ஏதுமின்றி உயிர் தப்பினர்.

இந்த நிலையில் தாராபுரம் பகுதியில் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக மக்கள் செய்தி தொடர்பு துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் ஆகியோர் அந்த வழியாக சென்றுள்ளனர்.



அப்போது அவர்கள் இருவரும் காரில் இருந்து இறங்கி விபத்தில் படுகாயம் அடைந்த நபர்களை  மீட்டு 108 அவசர ஊர்தி மூலம் காங்கேயம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.



திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ்  மற்றும் அமைச்சர் சாமிநாதன் ஆகியோர் சாலை விபத்தில் படுகாயம் அடைந்த நபர்களை மீட்டு உரிய சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் பரவி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.



அரசு விழாவிற்கு செல்ல காலதாமதம் ஆனாலும் பரவாயில்லை விபத்தில் இருந்தவரை மீட்டு உரிய சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர்.மு. பெ. சாமிநாதன் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர். கிறிஸ்துராஜ் ஆகியோருக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா, தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கல்

கோவை கவுண்டம்பாளையம் மைதானத்தில் பி.ஜே.எம்.எம். அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய...

Systemic Corruption Persists Unabated: Coimbatore Unit of Anti-Corruption Movement

The Coimbatore district unit of the Anti-Corruption Movement submitted a representation to Tamil Nadu Chief Minister C J...

கோவை ரயில் நிலையம் அருகே சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்; போலீசார் விசாரணை

கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலையில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பர...

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...