அவினாசி பெரிய கோவில் மீதான தாக்குதல் குறித்து தீவிர விசாரணை தேவை..! - பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

அவினாசி 'பெரிய கோவில்' மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும் சிபிஐ அல்லது என்.ஐ.ஏ. விசாரணைக்கு திமுக அரசு பரிந்துரைக்க வேண்டும் எனவும். பாஜக மகளிரணி தேசிய தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.



திருப்பூர்: அவிநாசி பெரிய கோவில் மீதான தாக்குதல் குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

திருப்பூர் மாவட்டம், அவினாசியில், 'பெரிய கோவில்" என்றழைக்கப்படும், அவினாசி லிங்கேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. தேவார பாடல் பெற்ற இவ்வாலயம், அப்பகுதி மக்களின் உணர்வுகளோடும், அன்றாட வாழ்வியலோடும் கலந்துவிட்ட ஒன்று.

மே 23-ம் தேதி அதிகாலை, அருள்மிகு அவினாசி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் சுவாமி சிலைகள், நாயன்மார்கள் சிலைகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டு உள்ளன. முருகப்பெருனானின் வேலை பிடுங்கி, அதனைக் கொண்டு சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன. கோபுரங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. 

அருள்மிகு அவினாசிலிங்கேஸ்வரர் கருவறைக்குள் நுழைந்தும் அட்டூழியம் செய்துள்ளனர். இந்த செய்திகள் பெரும் அதிர்ச்சியும், தாங்க முடியாத மன வேதனையையும் அளிக்கின்றன. இந்நிலையில், கோயில் கோபுரத்தில் பதுங்கி இருந்ததாக ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மனநிலை சரியில்லாத அவர் தான் சிலைகளை உடைத்து, கருவறைக்குள் அட்டூழியம் செய்தார் என்று காவல்துறையினர் கூறுகின்றனர். இது நம்பத்தகுந்ததாக இல்லை. 

கடந்த காலங்களிலும் அருள்மிகு அவினாசிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பல்வேறு முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. 1991-ம் ஆண்டு இவ்வாலயத்தின் திருத்தேர் எரிக்கப்பட்டது. 2003-ம் ஆண்டு அம்பாள் சன்னதிக்குள் புகுந்து, ஒருவர் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். 

அப்போது மாற்று மதத்தினரின் நூல்கள் கைப்பற்றப்பட்டன. இந்த ஆலயத்தின் பின்பகுதியில் பொதுமக்கள் வழிபட்டு வந்த சிலைகள் கடந்த ஆண்டு சேதப்படுத்தப்பட்டன. இப்படி இக்கோயில், குறிவைத்து தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்துவரும் நிலையில் தான், தற்போதைய கொடூரமும் நிகழ்ந்திருக்கிறது.

இதற்கெல்லாம் தனி நபர் ஒருவர் தான் காரணம், அதுவும் மனநிலை சரியில்லாதவர்தான் காரணம் என்பதை அவிநாசிலிங்கேஸ்வரரின் பக்தர்கள் யாரும் நம்பவில்லை. தமிழகத்தில் ஆளும் திமுக அரசு, இந்து மதத்தின் மீதும், இந்து கடவுள்களின் மீது மட்டும் நம்பிக்கையற்ற அரசு. மாற்று மதத்தினரின் பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள், இந்து மதப் பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்வதில்லை. 

மாற்று மதத்தினரின் பண்டிகைகள், விழாக்களில் கலந்து கொள்ளும் முதலமைச்சர் ஹிந்து மத பண்டிகைகள், கோயில் விழாக்களில் மட்டும் கலந்து கொள்வதில்லை. தமிழர்களின் அடையாளங்களில் ஒன்றான சீர்காழி அருள்மிகு சட்டநாதர் கோயில் கும்பாபிஷேகத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் கலந்து கொண்டுள்ளார். ஆனால், முதலமைச்சரோ, அமைச்சர்களோ அங்கு செல்லவில்லை. 

இயல்பாகவே இந்து மதத்தின் மீதும், இந்து கோயில்கள் மீதும் திமுக அரசு நம்பிக்கையற்று இருப்பதால், கோயில்களை பாதுகாப்பதில் போதிய அக்கறை காட்டுவதில்லை என்ற சந்தேகம் எப்போதும் எழுகிறது. எனவே, அவினாசி ஆலயத்தில் நடந்த அட்டூழியங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும். தேவைப்பட்டால் சிபிஐ, தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரணைக்கும் தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும். 

ஏனென்றால் எப்போதெல்லாம் கோயில் சிலைகள் உடைக்கப்படுகிறதோ அப்போதெல்லாம், மனநிலை சரியில்லாதவர் என்று ஒருவரை காவல் துறை கைது செய்கிறது. தமிழகத்தில், ஆயிரம் ஆண்டுகள், பல நூறு ஆண்டுகள் பழமையான, பல்லாயிரம் இந்து கோயில்கள் உள்ளன. அவற்றைப் பாதுகாக்க, 'தனி பாதுகாப்பு படை' ஒன்றை உருவாக்க வேண்டும். 

இந்த விவகாரத்தில் முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு உரிய விசாரணை நடத்தி, உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து தண்டிக்க வேண்டும். இந்துக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை திமுக அரசு உணரும் என்று நம்புகிறேன். 

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...