கோவை பீளமேடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை, பணம் திருட்டு

கோவை சரவணம்பட்டி விளாங்குறிச்சி சாலை விஸ்வேஸ்வரா நகரை சேர்ந்தவர் சஜித் (40). இவர் கடந்த 18ஆம் தேதி கேரளா சென்ற நிலையில், அவரது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் பூட்டை உடைத்து 7 பவுன் தங்க நகை மற்றும் 1 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.


கோவை: சரவணம்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் தங்க நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

கோவை சரவணம்பட்டி விளாங்குறிச்சி சாலை விஸ்வேஸ்வரா நகரை சேர்ந்தவர் சுரேந்தர் மகன் சஜித் (40). இவர் கோச்சிங் சென்டர் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 18 ஆம் தேதி சஜித், தனது வீட்டை பூட்டி, சாவியை தன தந்தையிடம் கொடுத்துவிட்டு, சொந்த ஊரான கேரளா மாநிலம் பாலக்காட்டிற்கு சென்றுள்ளார்.

இதையடுத்து சஜித்தின் தந்தை சுரேந்தர் நேற்று முன்தினம் மாலை வீட்டிற்கு வந்து பார்த்துவிட்டு சென்றுள்ளார். பின்னர் நேற்று காலை சென்று பார்த்த போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்த அவர் உடனடியாக தனது மகன் சஜித்திற்கு தகவல் அளித்தார். பின்னர் அவர் வந்து பார்த்தபோது வீட்டின் உள்ளே இருந்த பிரோவை உடைத்து அதில் இருந்த ஏழு பவுன் நகை மற்றும் ஒரு லட்சம் பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து சஜித் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் அங்கு பதிவான கைரேகைகளை சேகரித்தனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து தப்பிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...