திருப்பூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக கிறிஸ்துராஜ் பொறுப்பேற்பு

திருப்பூர் மாவட்டத்தின் 11வது ஆட்சியராக கிறிஸ்துராஜ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். திருப்பூர் மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் சென்றுசேர அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்போடு பாடுபடுவேன் என்று ஆட்சியர் கிறிஸ்துராஜ் உறுதியளித்துள்ளார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த வினீத் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் சேலம் மாநகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்த கிறிஸ்துராஜ், திருப்பூர் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டார்.



இதனை தொடர்ந்து, இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிறிஸ்துராஜ் பொறுப்பேற்றுக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:



புதிதாக பணியிடமாற்றம் மற்றும் பணி உயர்வு பெற்ற மாவட்ட ஆட்சியர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் தமிழக முதல்வரை சந்தித்தோம், அப்போது தமிழக முதல்வர் தமிழக அரசின் திட்டங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் கிராமங்கள், நகரங்கள் என அனைத்து பகுதிகளுக்கும் அனைத்து மக்களுக்கும் சென்றடைய உழைத்திட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

அது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை முதல்வர் வழங்கி இருக்கிறார். முதல்வரின் ஆலோசனைகளின்படி திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் வளர்ச்சி திட்டங்கள் சென்றடைய மாவட்டத்தில் உள்ள அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்போடு பணியாற்றுவேன்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார். இன்று புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் திருப்பூர் மாவட்டத்தின் 11வது மாவட்ட ஆட்சியர் என்பது குறிப்பிடத்தக்கது‌.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...