அமைச்சர் செந்தில்பாலாஜி உடனடியாக பதவி விலக வேண்டும் - டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்!

அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் சார்பில் வரும் மே 27ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டமும், ஜூன் 15-ல் சட்ட விரோத மதுவிற்பனையை தடுக்க கோரி பேரணியும், பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளது என டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.



கோவை: அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி மே 27ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

கோவை குனியமுத்தூரில் உள்ள பொதிகை இல்லத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது,



பெருங்கருணை மற்றும் இ.கே.ஆர்.குப்பம் கிராமத்தை சேர்ந்த 22 பேர் மது அருந்தி உயிரிழந்துள்ளனர். இதனை உயிரிழந்தவர்களின் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்னிடம் முறையிட்டனர். 

மீனவர்கள் வசிக்கின்ற அந்த கிராமத்தைச் சார்ந்தவர்கள் மது விற்பனை செய்யக்கூடாது என்று இருந்தாலும், அரசியல் பின்புலத்தோடு காவல்துறை துணையோடு அந்த பகுதி மக்களுக்கு வேறு கிராமத்தாரால் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்டது. இதன் காரணமாகத்தான் அங்குள்ள பல்வேறு இளைஞர்கள் மது பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர்.

டாஸ்மாக் மற்றும் அதற்கு இணையாக விற்பனை செய்யப்படும் மது குறித்து பல தகவல் வெளிய வர துவங்கியுள்ளது. சட்டவிரோதமாக அனுமதி இல்லாமல் இரவு 10 மணிக்கு பிறகும் விடிய விடிய மது விற்பனை நடைபெற்று கொண்டுள்ளது. 

செந்தில் பாலாஜி நான் சொல்லக்கூடிய புள்ளிவிவரம் தவறு என்றார். ஆனால் நான் கூறிய பல லட்சம் கோடி ஊழல் நடைபெறுகிறது என்பதற்கு ஆதாரமாக தான் இகேஆர் குப்பம் சம்பவம் வெளிப்படுத்துகிறது. 22 பேர் உயிரிழந்த நிலையிலும் கூட தற்போது வரை எந்த அமைச்சரும் அந்த கிராமத்திற்கு சென்று மக்களை சந்திக்கவில்லை.துறையின் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்னும் பார்க்கவில்லை. 22 பேர் மரணத்திற்கு செந்தில் பாலாஜி பொறுப்பேற்று அவர் பதவி விலகி இருக்க வேண்டும். ஆனால் அவர் விலகவில்லை. 

விதிமுறைகளுக்கு மாறாக தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களின் ரத்தமும் வியர்வையும் சுரண்டப்படுகின்ற சூழல் இருந்தும் கூட இந்த அமைச்சர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏற்புடையது அல்ல. உச்ச நீதிமன்றம் போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது பல பணியிடங்களுக்கு பணம் பெற்றார் என தெரிவித்தும் கூட செந்தில் பாலாஜி பதவி விலகவில்லை.

புதிய தமிழகம் கட்சியின் சார்பில் வரும் மே 27 ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செந்தில் பாலாஜியை கண்டித்து, அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும். சட்ட விரோத மது விற்பனையை தடுக்க வரும் ஜூன் மாதம் 15ஆம் தேதி பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெறும்.

2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்குவது குறித்தான நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என தெரிவித்த அவர் 2000 ரூபாய் நோட்டுகள் தற்போது 10% மட்டும் தான் புழக்கத்தில் உள்ளது. அதையும் நீக்குவதற்கு ரிசர்வ் பேங்க் அறிவித்துள்ளது. இனி இதுபோன்ற அறிவிப்புகள் ஏழைகள் அல்லது பணக்காரர்கள் உள்ளிட்டோக்கு பாதிப்புகளையும் பதட்டங்களையும் ஏற்படுத்தும். 

ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற போது பணக்காரர்கள் எளிதில் மாற்றிக் கொண்டார்கள் என தெரிவித்த அவர் ஏழை மக்கள் அதனை மாற்றுவதற்கு வெயிலில் நின்று பல உயிரிழப்புகள் ஏற்பட்டது. 10% புழக்கத்தால் 2000 ரூபாய் நோட்டால் நாட்டுக்கு என்ன இழப்பு ஏற்படுகிறது என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும்.

வங்கிகள் ரிசர்வ் பேங்க் உத்தரவை செயல்படுத்த வேண்டும். வங்கிகள் தவறுதலாக செயல்பட்டால் வங்கி அதிகாரிகள் மீது ரிசர்வ் பேங்க் நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிக்கடி பண மதிப்பிழப்பு செய்வது இந்தியாவின் மதிப்பை குறைத்து விடும். இது அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது. மேலும் இது பொருளாதாரத்தின் மீதும் பாதிப்பை ஏற்படுத்தும்.

கர்நாடகத்தில் ஏற்பட்ட தோல்வியை வைத்து இந்தியா முழுவதும் இதுதான் என சொல்வது தவறானதாகும். தலைகீழாக நின்னாலும் தமிழ்நாட்டில் கர்நாடகத்தின் முடிவுகள் போல் இருக்காது, 2024ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வேறு மாதிரி இருக்கும்.

அறுக்க தெரியாதவரிடம் ரெண்டு அறிவாள் அதுபோல் செந்தில்பாலாஜியிடம் 2 துறை கொடுக்கப்பட்டுள்ளது. எந்த கட்சிக்கு சென்றால் பதவி இருக்குமோ அங்கு ஓடிவிடும் ஓடுகாலி போல் மாறி மாறி செல்பவர் செந்தில்பாலாஜி மின்துறையை சரியாக கவனிக்காததால் தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின் வெட்டும் உள்ளது. எனவே செந்தில் பாலாஜியே பதவி விலக வேண்டும்.

மேலும் செந்தில் பாலாஜி கரூரில் ஜெயித்தவர். கரூருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது. 44,000 கோடி வருமானம் கொடுக்ககூடிய டாஸ்மாக் நிறுவனத்தால் நட்ட கணக்கு காட்டப்படுகிறது. விற்பனையில் வெளிப்படையில்லை. பாட்டிலுக்கு 20 ரூ கூடுதலாக வாங்குவதற்கு செந்தில்பாலாஜி விளக்கம் கொடுக்க வேண்டும். வருமான வரித்துறை 150 கோடி ரூபாய் டாஸ்மாக் மீது பெனால்டி போட்டுள்ளது. மத்திய அரசு இதனை விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...