மேட்டுப்பாளையம் அருகே கூட்டாளிகளுடன் பாகுபலி யானை உலா - வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை!

மேட்டுப்பாளையம் அருகே 3 யானைகளுடன் குடியிருப்புப் பகுதிகளில் உலா வரும் பாகுபலி யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.



கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரத்திற்குட்பட்ட நெல்லிமலை அடிவாரத்தில் குரும்பூர், சமயபுரம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.

இதனிடையே வனப்பகுதியில் இருந்து காட்டுயானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உணவு குடிநீர் தேடி குடியிருப்பு, விளை நிலங்களில் நுழைந்து பொதுமக்களையும் விவசாயிகளையும் அச்சுறுத்தி வருகின்றன.

இதில் வனப்பகுதியில் கடந்த சில மாதங்களாக காட்டு யானை பாகுபலியுடன் கூடுதலாக 3 காட்டுயானைகள் நடமாடி வருகின்றன. குறிப்பாக, அதிகாலை நேரத்திலும் மாலை நேரத்திலும் சமயபுரம் கிராமத்தில் உள்ள கிராம சாலையை கடந்து செல்கிறது. இன்று காலை முதலில் பாகுபாலி யானையும், அந்த யானையை தொடர்ந்து மற்ற 3 யானைகளும் வந்தன.

அந்த யானைகள் கிராமத்துக்குள் இருந்த மாடுகளை துரத்தியபடி சென்றன. அந்த சமயம் பொதுமக்கள் அச்சம் அடைந்து தங்கள் வீடுகளை பூட்டிக் கொண்டு உள்ளேயே இருந்து கொண்டனர். இப்பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், காட்டு யானை அடிக்கடி ஊருக்குள் வருவது அந்த பகுதியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

அந்த யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...