காரமடை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.2.71 கோடிக்கு கொப்பரை கொள்முதல்

கோவை மாவட்டம் காரமடை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இதுவரை 250 டன் கொப்பரை தேங்காய் ரூ.2.71 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக விற்பனை கூட கண்காணிப்பாளர் யுவராஜ் தெரிவித்துள்ளார்.


கோவை: காரமடை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 250டன் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் தென்னை விவசாயம் பிரதானமாக செய்யப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டுமென மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு முதல் காரமடை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் காரமடை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இங்கு காரமடை,மேட்டுப்பாளையம்,சிறுமுகை மட்டுமல்லாது பொள்ளாச்சி,நெகமம் உள்ளிட்ட கோவையின் பல்வேறு பகுதிகளிலிருந்து கொப்பரை தேங்காய் கொண்டு வரப்படுகிறது.

இங்கு பருப்பு கொப்பரை தேங்காய் ரூ.108.60 - க்கும், பந்து கொப்பரை தேங்காய் ரூ.118 - க்கும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஈரப்பதமானி கொண்டு கொப்பரை ஈரப்பதத்தின் அளவு ஆறுக்கும் கீழ் இருந்தால் மட்டுமே கொப்பரை கொள்முதல் நடைபெறுகிறது.

இப்பணிகளில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை தர ஆய்வுப்பணியில் ராமகிருஷ்ணன் ஈடுபட்டு வருகிறார்.

இதுகுறித்து ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் யுவராஜ் கூறுகையில் விவசாயிகள் தங்களது பட்டா,சிட்டா அடங்கல் உள்ளிட்டவற்றை கொடுத்து முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றார். தற்போது கொப்பரை தேங்காய் ரூ.108.60 பைசாவிற்கு கொள்முதல் செய்யப்பட்டு வருவதாகவும்,

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இதுவரை 149 விவசாயிகளிடமிருந்து 250 டன் கொப்பரை தேங்காய் ரூ.2.71 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், தங்களுடைய இலக்கான 1000 டன் கொப்பரை தேங்காயினை விரைவில் கொள்முதல் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும்,சிக்கதாசம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள மெகா மார்க்கெட் வளாகத்தில் அரசுக்கு சொந்தமான 500 மெட்ரிக் டன் கொள்ளளவுள்ள குளிர்பதன கிடங்கு உள்ளதாகவும், இந்த கிடங்கில் மஞ்சள், மிளகாய், காய்கறிகள், பழங்கள்,பூக்கள் உள்ளிட்டவற்றை இருப்பு வைத்துக் கொள்ளலாம் எனவும்,

ஏற்றுமதி செய்யும் வியாபாரிகளுக்கு இந்த மையம் பேருதவியாக இருக்கும். எனவே இந்த மையத்தினை வியாபாரிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (22.09.2026) மின்தடை

கோவை ஆர்.எஸ்.புரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக 22.09.2026 அன்று காலை 9 மணி முதல் மாலை...