பெண்களின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து மிரட்டும் கும்பல் - கோவையில் பெண்கள் புகார்!

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி கவிதா உள்பட 3 பெண்கள், தங்களது புகைப்படங்களை சிலர் மார்ஃபிங் செய்து இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபடுவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.


கோவை: பெண்களின் புகைப்படங்களை மார்ஃபிங் செய்து பணம் கேட்டு மிரட்டுவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் மூவர் கோவையில் புகார் அளித்துள்ளனர்.

தங்களது அந்தரங்க புகைப்படம் மற்றும் வீடியோவை எடுத்து வைத்துக்கொண்டு தனியார் youtube நடத்தும் நபர்கள் தங்களிடம் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் கொலை மிரட்டல் விடுவதாகவும் மூன்று பெண்கள் கூறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியைச் சேர்ந்த கவிதா, சென்னையை சேர்ந்த மும்தாஜ், கோவையை சேர்ந்தவரும் பாண்டிச்சேரியில் வசித்து வருபவருமான சித்ரா உள்ளிட்ட மூன்று பெண்கள் கோவையில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அவர்கள் பேசியதாவது, ஐந்து பேர் கொண்ட கும்பல் சமூக ஊடகங்கள் மற்றும் youtube போன்ற தளங்கள் வாயிலாக பெண்களை கவர்ந்து, அவர்களிடம் நன்கு பழகி அவர்கள் வலையில் விழச் செய்கின்றனர்.

பின்னர் ஆசைவார்த்தை கூறி அவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கே தெரியாமல் அவர்களது வீட்டில் ஸ்பை கேமராக்களை நிறுவி அதன் மூலம் பெண்களின் அந்தரங்க படங்கள் மற்றும் வீடியோ ஆகியவற்றை எடுத்து வைத்து கொள்கின்றனர்.

மேலும் அந்த வீடியோக்களை மார்ஃபிங் செய்து அவர்களுக்கே அனுப்பி பணம் கேட்டு மிரட்டுகின்றனர். பணம் தர மறுத்தால் அந்த வீடியோக்களை அவர்களுக்கு சொந்தமான youtube தளங்களில் பதிவேற்றம் செய்து பலருக்கும் அதனை அனுப்பி வைத்து மிரட்டல் விடுக்கின்றனர்.

இதுகுறித்து மூவரும் சேர்ந்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கோவையிலுள்ள பிரபல வழக்கறிஞரை சந்தித்து சம்பவம் தொடர்பாக வழக்கு தொடுக்க இருக்கிறோம்.

தொடர் மிரட்டல் விடுத்தும் அந்தரங்க படங்களை யூடியூபில் பதிவேற்றம் செய்தும் வரும் நபர்களின் செயல்பாடுகளால் கவிதா என்ற பெண் இரு முறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இச்செயலில் தாங்கள் மட்டுமல்லாது பல பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே காவல்துறையினர் பாரபட்சமின்றி பாலியல் தொல்லை செய்யும் இந்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...