வால்பாறை அருகே குழந்தைகள் காப்பகத்தை உடைத்த காட்டு யானைகள் - பொதுமக்கள் அச்சம்!

தமிழக -கேரள எல்லையில் வால்பாறை அடுத்த பன்னிமேடு எஸ்டேட் வனப்பகுதியில் முகாமிட்டு இருந்த 4 காட்டு யானைகள் எஸ்டேட் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கட்டப்பட்டிருந்த காப்பகத்தின் கதவு மற்றும் ஜன்னலை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: வால்பாறை அருகே குழந்தைகள் காப்பகத்தை காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்திய சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோடைகாலம் தொடங்கியதால் வால்பாறை வனப்பகுதியில் முகாமிட்டு இருந்த காட்டு யானைகள் கூட்டம் கேரள வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்து வருகிறது. இதனால் தமிழக-கேரள எல்லை பகுதியையொட்டிய எஸ்டேட் பகுதியில் கடந்த 3 நாட்களாக காட்டு யானைகள் கூட்டம் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது.

தமிழக-கேரள எல்லையையொட்டிய வால்பாறை அருகே பன்னிமேடு எஸ்டேட் 2-வது பிரிவு தேயிலை தோட்டத்திற்கு அருகில் உள்ள வனப்பகுதியில் முகாமிட்டு இருந்த 4 காட்டு யானைகள் எஸ்டேட் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான காப்பகத்தின் ஜன்னலை உடைத்து சேதப்படுத்தியுள்ளன.

மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த உணவு பொருட்கள், முட்டைகள், சத்துமாவுகள் மற்றும் தின்பண்டங்களை தின்று சேதப்படுத்தியதோடு துதிக்கையால் வனப்பகுதிக்குள் தூக்கி சென்றது. பன்னிமேடு எஸ்டேட் தோட்ட அலுவலகத்தையும் உடைத்து அங்கிருந்த பொருட்களையும் வெளியே எடுத்து வீசியது.

மேலும் அலுவலகத்திற்கு முன்பு இருந்த மாரியம்மன் கோவில் கதவு, ஜன்னலை உடைத்து அலங்கார பொருட்களை வெளியே வீசி எறிந்தது. நீண்ட நேரமாக அங்கேயே யானைகள் சுற்றி திரிந்ததால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.

இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த மானாம் பள்ளி வனத்துறையினர் காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு யானைக் கூட்டத்தை குடியிருப்பு பகுதியிலிருந்து வனத்திற்குள் விரட்டியடித்தனர்.

அதன்பின்னரே பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் வனத்துறையினர் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். மேலும் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் தொழிலாளர்கள் கவனமாக இருக்கவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...