கோவையில் ஓடும் பேருந்தில் இளைஞரை சரமாரியாக வெட்டிய 4 பேர் கொண்ட கும்பல் - ஒருவர் கைது!

கோவை அரசு மருத்துவமனை அருகே முன்விரோதம் காரணமாக கமலேஷ் என்ற இளைஞரை ஓடும் பேருந்தில், 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிய நிலையில், அந்த கும்பலில் சந்தோஷ் என்ற நபரை பொதுமக்கள் பிடித்து ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் ஓடும் பேருந்தில் இளைஞரை 4 பேர் கொண்ட கும்பல், சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் ஓடும் பஸ்சில் வாலிபரை 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டியது. பஸ்சில் இருந்த பயணிகள் ஒருவரை மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

கோவை சவுரிபாளையத்தை சேர்ந்த கண்ணன் என்பவருடைய மகன் கமலேஷ் (19). கடந்த சில நாட்களுக்கு முன்பு புலியகுளத்தில் நடந்த மாரியம்மன் கோவில் திருவிழாவில் நடந்த தகராறில், சந்தோஷ் என்பவரை கமலேஷ் கத்தியால் தாக்கியதாக தெரிகிறது. இதில் சந்தோஷ்குமாருக்கு காயம் ஏற்பட்டது.

ராமநாதபுரம் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இருந்தனர். இந்நிலையில், தன்னை கத்தியால் குத்தியதால் கமலேசை பழிவாங்க சந்தோஷ் திட்டமிட்டார். இதனிடையே நேற்றிரவு 8 மணியளவில் சிங்காநல்லூரில் இருந்து தீத்திப்பாளையம் நோக்கி சென்ற எஸ்.3 அரசு பேருந்தில் கமலேஷ் பயணம் செய்தார்.

கமலேஷ் பேருந்தில் ஏறுவதை பார்த்த சந்தோஷ் உள்பட 4 பேர் 2 மோட்டார் சைக்கிள்களில் அந்த பேருந்தை பின்தொடர்ந்தனர். கோவை அரசு மருத்துவமனை நிறுத்தத்தில் பேருந்து நின்றதும், மோட்டார் சைக்கிள்களை பேருந்தின் முன் நிறுத்திவிட்டு பேருந்திற்குள் ஏறிய 4 பேரும், கமலேஷை அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக தெரிகிறது.

இதில் அவருக்கு தலையில் வெட்டு விழுந்தது. தப்பி ஓட முயன்றார். இந்த சம்பவத்தை பார்த்ததும் சில பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கி அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். சில பயணிகள் துணிச்சலுடன் அரிவாளால் வெட்டிய கும்பலை மடக்கிப்பிடிக்க முயன்றனர்.



அதில், 3 பேர் தப்பி ஓடிய நிலையில், சந்தோஷ் குமார் என்பவர் மட்டும் பயணிகளிடம் பிடிபட்டார். அவரை ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். காயமடைந்த கமலேஷ் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த பயங்கர சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...