கோவையில் மாடியில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி பலி - போலீசார் விசாரணை

கோவை துடியலூர் அருகே சுப்பிரமணியம்பாளையம் பகுதியில் முதல் மாடியில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி சாந்தாமணி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை சுப்பிரமணியம்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் தனது தாயார் சாந்தாமணியுடன் குடியிருந்து வருகிறார். சாந்தாமணிக்கு புற்றுநோய் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டின் முதல் மாடியில் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

அப்போது, எதிர்பாராத விதமாக முதல் மாடியில் இருந்து கீழே விழுந்ததில் படுகாயமடைந்துள்ளார். அவரை உடனடியாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.



ஆனால், அங்கு சிகிச்சை பலனில்லாமல் சாந்தாமணி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த துடியலூர் போலீசார், சாந்தாமணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...