கட்டடப் பொறியாளர்களுக்கு தனி கவுன்சில் - தமிழக அரசுக்கு பொறியாளர்கள் சங்கம் கோரிக்கை!

தமிழகத்தில் போலி பொறியாளர்களை களையெடுக்கவும் கட்டுமான பொருட்களின் விலையை குறைக்கவும் பொறியாளர்களுக்கென தனி கவுன்சில் அமைக்க வேண்டும் என்று கட்டிட பொறியாளர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ராயர்பாளையத்தில் பல்லடம் கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் ஏற்பு விழா நடைபெற்றது.

அதில், சங்கத்தின் 2022 ஆம் ஆண்டில் முக்கிய பொறுப்பில் இருந்த முன்னாள் நிர்வாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்து நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.



இதன் தொடர்ச்சியாக பல்லடம் கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான புதிய தலைவராக சிற்பி செல்வராஜ், துணை தலைவராக மோகனகண்ணன், செயலாளர் தனபால்,பொருளாளர் பொன்.சக்திவேல், ஆகியோர் உறுதிமொழி அளித்து பதவியேற்றுக் கொண்டனர்.



முன்னாள் பொறுப்பாளர்கள் புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட பொறுப்பாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துத் தெரிவித்தனர்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கட்டிட பொறியாளர் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் மோகன் ராஜா, தமிழ்நாடு முழுவதும் கட்டுமான தொழிலை நம்பி 10 ஆயிரம் கட்டிட பொறியாளர்களும் 50 லட்சம் தொழிலாளர்களும் உள்ளனர். கட்டுமான பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

அதேபோன்று பட்டம் பெறாத போலி பொறியாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனவே, கட்டுமான பொருட்களின் விலையை குறைக்கவும் போலி பொறியாளர்களை களையெடுக்கவும் தமிழக அரசு உடனடியாக மருத்துவத்துறை, வழக்கறிஞர்களுக்கு என பார் கவுன்சில் உள்ளதுபோல பொறியாளர்களுக்கு என தனி கவுன்சில் அமைத்து தர வேண்டும். கட்டிட பொறியாளர்களுக்கு என தனியாக வாரியம் அமைத்து தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

மலையடிபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை மலையடிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை (23.09.2026) காலை 9 மணி முதல் மதியம் 2 மண...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி முதல...

பீளமேடு பள்ளியில் காலை உணவுத் திட்டம் தொடக்கம்; நியாய விலை கடை உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் செப்டம்பர் 22, 2026 அன்று நான்கு முக்கிய பணிகள் நடைபெற்றன...

கோவை SRIT-ல் EBDC 6.0 மின்சார இருசக்கர வாகன வடிவமைப்பு சவால் தொடக்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் (SRIT) செப்டம்பர் 22ஆம் தேதி காலை 10.30 மணிக்கு EBDC 6.0 மின்சார இருசக்க...

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்: கோவையில் அமைச்சர் சம்பத் குமார் தொடங்கி வைத்தார்

கோவை இரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் தி...

கோவை கணபதி பள்ளியில் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்த மேயர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 20-க்குட்பட்ட கணபதி, இராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மேயர் ரங...