கோவை மாநகராட்சி கோணவாய்க்கால்பாளையம் மற்றும் செல்வபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் மற்றும் தார்ச்சாலை அமைக்கும் பணிகளை நேரில் ஆய்வு செய்த மேயர் கல்பனா, பணிகளை 15 நாட்களுக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவிட்டார்.
கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாநகராட்சியின் தெற்கு மண்டலம் வார்டு எண்.99 மற்றும் 85க்கு உட்பட்ட கோணவாய்க்கால்பாளையம் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை மூலம் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் மற்றும் தார் சாலை அமைக்கும் பணிகளை மேயர் கல்பனா ஆனந்தகுமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் மழைநீர் வடிகால் மற்றும் தார் சாலை அமைக்கும் பணிகளை 15 தினங்களுக்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும் பொறியாளர்களுக்கு உத்தரவிட்டனர்.

அதனைத்தொடர்ந்து, தெற்கு மண்டலம் வார்டு எண்.79க்கு உட்பட்ட செல்வபுரம் பகுதியில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த மேயர் கல்பனா, அப்பகுதியிலுள்ள மழைநீர் வடிகாலை தூர்வாரவும், புதிதாக மழைநீர் வடிகால் கட்ட உரிய திட்ட மதிப்பீடு தயாரிக்கவும் சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார்.